Followers

Friday, December 9, 2016

பரிகாரம் தேவையா?


வணக்கம்!
         நேற்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். பரிகாரம் எல்லோருக்கும் தேவையான ஒன்று தானா என்று கேட்டார். 

ஒருவருக்கு சோதிடத்தின் மீது ஏன் ஈர்ப்பு வருகின்றது. சோதிடத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் ஈடுபடுகின்றார்களா கிடையாவே கிடையாது. சோதிடத்தின் பக்கம் திரும்புவதற்க்கு கஷ்டம் மட்டுமே காரணம். ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் நிறைய கஷ்டம் ஏற்படும்பொழுது சோதிடத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று வருகின்றார்கள்.

யாருக்கும் இல்லாத ஒரு வாய்ப்பு இந்து மதத்தில் இருக்கின்றது. உனக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வரும் அந்த கஷ்டத்திற்க்கு இது மருந்து என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அப்பொழுது அதனை நாம் பயன்படுத்தலாம் அல்லவா.

நன்றாக செல்லும் நபர்களுக்கு எல்லாம் இதனைப்பற்றி கவலை இல்லை. அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுக்கொண்டு இருக்கும் அவர்கள் எதற்க்கும் கவலைப்படபோவதில்லை. ஒரு சாதாரண நபருக்கு ஒரு பெரிய பிரச்சினை வருகின்றது என்றால் அதனை தாங்கிக்கொள்ளகூடிய சக்தி அவருக்கு இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரம் கண்டிப்பாக தேவை.

நல்ல வாழ்க்கிறவனுக்கும் தனக்கு ஏதும் வந்துவிடகூடாது என்றும் பரிகாரம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். எல்லாமும் அதுவாகவே நடக்கிறது அதன்பிறகு எதற்கு இது எல்லாம் என்று கேட்கலாம்.

நாம் பிறந்தவுடன் நமக்கு எல்லாம் நடக்கும் என்றால் சுற்றி நமக்காக செய்யும் நபர்கள் எல்லாம் எதற்க்கு அதுவாகவே நடக்கும் என்று நம்மை கவனிக்காமல் விட்டுவிட்டால் எப்படி இருக்கும். மனிதன் பிறந்தவுடன் இறந்துவிடுவான்.

பிறந்த மனிதனுக்கு இறப்பு என்பது நிச்சயம் ஆனால் இடையில் வாழும் வாழ்க்கைக்கு பல விசயங்கள் தேவைப்படுகிறது அல்லவா அதற்கு எல்லாம் நிறைய போராட்டங்கள் ஒவ்வொருவரும் செய்கிறார்கள் அல்லவா அது போல தான் பரிகாரமும்.

உங்களின் வாழ்க்கையை அழகுபடுத்த நிம்மதியாக வாழ்வை அனுபவிக்க இப்படிப்பட்ட விசயங்களில் எல்லாம் நீங்கள் அவ்வப்பொழுது செய்யும்பொழுது மட்டுமே வாழ்க்கை நன்றாக செல்லும். வாழ்வில் தேவையில்லாமல் நிறைய விசயங்களை செய்கிறோம். நமக்கு தேவையான பரிகாரத்தை செய்வதால் ஒன்றும் குறைந்துபோகபோவதில்லை. தாராளமாக செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: