வணக்கம்!
எந்த ஒரு பூஜையும் அக்னியை வைத்து செய்யும்பொழுது நல்ல பலனை கொடுக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். அக்னி என்று வந்தாலே அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
அக்னியை வைத்து ஹோமம் செய்யும்பொழுது நெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தில் நல்ல தரமான நெய் கிடைப்பது கடினம். நான் கடைகளில் வாங்கி தான் பயன்படுத்துக்கிறேன்.
வீட்டில் இருப்பது இரண்டு பசு மாடு இதனை வைத்து நெய்யை எடுப்பது கடினம். ஒரு நாளுக்கு நெய் இரண்டு கிலோ ஹோமத்திற்க்கு பயன்படுத்தும்பொழுது இரண்டு பசுமாட்டை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.
கடைகளில் நீங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் கொஞ்சம் நன்றாக உள்ளதை வாங்கி பயன்படுத்துங்கள். விலை கொஞ்சம் அதிகம் கொடுத்து வாங்கினால் ஒரளவுக்கு நன்றாக இருக்கின்றது. தரமான பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
நாம் நல்லதை நினைத்து தான் அனைத்தையும் வாங்கி பயன்படுத்துகிறோம் ஆனால் அதனை விற்க்கும் நபர்கள் தவறு செய்கின்றனர். அந்த தவறு நமக்கு கிடையாது அது விற்க்கும் நபருக்கு தான் செல்லும். பலன் முழுவதும் நமக்கு கிடைக்கும். காலத்தின் கோலம் அப்படி இருப்பதால் நாம் ஒன்றும் செய்யமுடியாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment