வணக்கம்!
நமக்கு எப்பேர்பட்ட பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சினையை சமாளிக்கும் யுக்தியை தருபவர் குரு. இன்றைய காலத்தில் குரு கிரகம் சரியாக இருக்கும் நபர்கள் எந்த ஒரு சிக்கலில் இருந்தும் தப்பிப்பார்கள் என்று சொல்லுவார்கள்.
குரு நன்றாக இருந்தால் அவர்களை காவல்துறை கூட கைது செய்யமுடியாது என்று சொல்லுவார்கள். குரு கிரகத்தின் சக்தி அப்படிப்பட்ட ஒன்று. குருவின் பலன் மட்டுமே இருந்தால் போதும் அவர்கள் எந்த ஒரு இடத்திலும் சைன் செய்து மேலே வந்துவிடுவார்கள்.
நம்முடைய சுகநிகழ்ச்சிகளுக்கு எல்லாம் குருவின் பலன் என்ன என்பதை தான் பார்ப்பார்கள். குரு பலன் வந்துவிட்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் அப்படி என்றால் குரு கிரகத்தின் பலன் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.
முக்கால்வாசி பேருக்கு குரு கிரகத்தின் பலன் முழுமையாக கிடைப்பதில்லை என்பது தான் உண்மையான ஒரு விசயம். குரு கிரகத்தின்பலன் கிடைத்துவிட்டால் அவர்கள் ஏன் கஷ்டப்படபோகின்றார்கள் அதுவாகவே நடைபெறும்.
குருகிரகத்தின் பலனை பெறுவதற்க்கு நாம் குலதெய்வத்தை வணங்கினால் கூட போதும் அதுவே குருவின் பலனை தரும் என்பது தான் உண்மையான ஒன்று.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
ராஜேஷ் அண்ணா வணக்கம்..ஒருவருக்கு குரு 6,8,12 கு.குரு அதிபதியாக வந்தால் நன்மை செய்வாரா?மேலும் குருவின் அருளை பெறுவது எப்படி?உதரணமாக கொண்டைகடலை மாலை போடுதல் போன்று வேரு முறைகள் சொல்லுங்கள்......
Post a Comment