வணக்கம்!
எனக்கு தெரிந்த ஒருவர் இரயில்வேயில் ைஉக வில் தொழில்நுட்ப பிரிவில் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தார். அவர் இயந்திரங்களை பற்றி அவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருந்தார். அதே நேரத்தில் அவர் பணி புரிந்த இடத்திலும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தற்பொழுது ஒய்வு பெற்றுவிட்டார். அவரின் ஜாதகத்தில் அவருக்கு செவ்வாய் கிரகம் பத்தில் இருந்தது. நல்ல துணிவு மிக்கவராகவும் அவர் இருந்தார். செவ்வாய் நல்ல நிலைமையில் இருந்தால் ஒருவர் துணிவுமிக்கவராக இருப்பார்.
அவரின் குடும்பமும் நல்ல பணபலன் படைத்த குடும்பமாக இருக்கின்றது. செவ்வாய் கிரகம் பலம் பெற்றால் எப்பேர்ப்பட்ட இயந்திரங்களையும் துணிவாக கையாளுவார்கள். மற்றவர்கள் பார்த்து பயப்படும் அளவுக்கு அவர்களின் துணிச்சல் இருக்கும்.
ஒரு ஆன்மீகவாதிக்கு செவ்வாய்கிரகம் பலம் பெற்றதாக இருக்ககூடாது. ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் செவ்வாய் பலன் பெற்றால் மரணத்தை பார்த்து பயப்படமாட்டார்கள். மரணத்தை பார்த்து பயம் ஏற்பட்டு அதன் பிறகு ஆன்மீகவாதியாக மாறுவார்கள். என்னடா வாழ்க்கை என்று நினைப்பு வரும்பொழுது தான் ஆன்மீகபாதையை நோக்க செய்யும்.
செவ்வாய் பலன் பெற்றுவிட்டால் இது நடக்காது. எதற்க்கும் பயப்படாதவர்கள் மரணத்திற்க்கு பயப்படமாட்டார்கள். செவ்வாய் பலன் பெற்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும். பலம் இல்லை என்றால் ஆன்மீகவாழ்க்கை நன்றாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment