வணக்கம்!
இன்றைய காலத்தில் நிறைய எதிர்பார்ப்போடு தான் ஆன்மீகத்தை நோக்கி செல்லுகின்றனர். எல்லாம் அவர் அவர்களின் தேவையை எதிர்நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். இன்றைய உலகத்தில் இது நடக்க தான் செய்யும் ஆனால் எந்த தேவையும் இல்லாமல் உன்னுடைய தரிசனம் எனக்கு கிடைக்கவேண்டும். எத்தனையோ விசங்கள் இருந்தாலும் நான் உன்னை தேடி வருகிறேன் அதுவே நான் செய்த புண்ணியம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?
கோவில் வாசலில் வீடு இருக்கும். அந்த கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசனம் செய்யாதவர்கள் இருக்கின்றனர். அவர்களின் கர்மா அப்படி இருக்கின்றது.
ஆன்மீகத்தை நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நோக்கினால் நீங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள். கர்மாவை இறைவனே போக்கிவிடுவான் உங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்க ஆரம்பித்துவிடும்.
எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்பொழுது இந்த எதிர்பார்ப்பு போய்விட்டால் இவன் நம்மை நோக்கமாட்டான் என்று நமது கர்மாவை போக்குவதில்லை. சுயநலம் அதிகமாக இருக்கும்பொழுது நமக்குள் இறைவன் வாசம் செய்வதில்லை என்பது தான் உண்மை.
ஆன்மீகத்தை நோக்கும்பொழுது நீங்கள் கடைபிடிக்கவேண்டியது ஒன்று தான். இந்த உலகத்தில் எவ்வளவு வேலைகள் இருக்கும்பொழுது உன்னை தேடி நான் வருகிறேனே அதுவே நான் செய்த புண்ணியம் என்று நினைத்து பாருங்கள். அனைத்தும் நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment