Followers

Monday, July 1, 2013

உருத்திர யோகம்


வணக்கம் நண்பர்களே !
                    லக்கினத்தில் ஒரு உச்ச கிரகம் இருக்க வேண்டும். இந்த உச்சகிரகத்தோடு குரு கிரகம் சேர்ந்து இருக்க வேண்டும் அதே நேரத்தில் லக்கினாதிபதி பலம் பெற்று அமரவேண்டும் அப்பொழுது அந்த ஜாதகருக்கு ஏற்படும் யோகம் உருத்திர யோகம் எனப்படும்.

இந்த ஜாதககட்டத்தில் மேஷ லக்கினத்தில் சூரியன் உச்சம் பெற்று குருவோடு அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதியாகிய செவ்வாய் கிரகம் மகரத்தில் உச்சம் பெற்று இருக்கிறது இப்படி கிரகங்கள் அமர்ந்தால் ருத்திரயோகம் ஏற்பட்டுவிடும்.

இந்த யோகத்தால் என்ன பயன்

அனைத்து படைகளையும் பெற்ற அரசனைப்போல் வாழ்வார்கள். நல்ல வயது இவருக்கு இருக்கும். இந்த காலத்தில் எங்கு படை வைத்துக்கொண்டு வாழ்வது. நல்ல வசதி வாய்ப்போடு மூன்று செக்கியூரிட்டுயோடு வாழ்வார் என்று வைத்துக்கொள்ள வேண்டியது தான். இந்த யோகம் சரியாக மூன்று வயதில் இருந்து ஆயுள் முழுவதும் இருக்கும் என்று சோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.

இதர கிரகங்கள் அமர்ந்தால் இந்த யோகம் ஏற்படுமா?

ஜென்ம லக்கினத்திற்க்கு 5 11 க்குரியவர்கள் இணைந்து 9 ஆமிடத்தில் அமர 10 க்குரியவ்ர் 5 ஆம் இடத்தில் இருக்கப் பிறந்தவர்களுக்கும் இந்த யோகம் ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: