Followers

Thursday, July 4, 2013

கோவில் கட்ட தடை ஏற்படுவது ஏன்?


வணக்கம் நண்பர்களே !
                    பல இடங்களில் கோவில்கள் கட்டுவதற்க்கு மக்கள் முயற்சிக்கிறார்கள். அந்த கோவிலை கட்டுவதற்க்கு ஆரம்ப பணி செய்யும்பொழுது பல தடங்கல் ஏற்பட்டு அந்த கோவில் கட்டப்படாமலே நின்றுவிடுகிறது. பணம் இருந்தும் கட்டப்படாமல் நின்றுவிடுகிறது.

இப்படி கோவில்கள் தடைப்பட்டு நிற்பதற்க்கு காரணம். ஆகம விதிகளை சரியாக பின்பற்றபடமால் இருந்தால் இப்படி நிற்க்கும். அப்படி இல்லை என்றால் அந்த கோவிலில் ஏதாவது துர்மரணங்கள் நடைபெற்று இருந்தால் கோவில் தடைபட்டு நிற்க்கும். ஒரு கோவிலை கட்ட முன்நிற்பவர்களின் ஜாதகம் மிகமுக்கியமான ஒன்று. பூர்வபுண்ணியம் நன்றாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானம் என்பது அதைவிட முக்கியம். ஒருவரின் பாக்கியஸ்தானத்தில் ராகு நின்றால் அந்த நபர்கள் எத்தனை கோவில்களும் கட்டமுடியும்.

ஒன்பதாவது வீட்டில் ராகு இருப்பது தோஷம் என்று சோதிடத்தில் சொல்லுவோம். கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர் என்று  சொல்லுவோம் அல்லவா. இந்த பித்ரு தோஷத்தை கொண்டவர்களால் கண்டிப்பாக ஒரு கோவிலை ஏன் பல கோவிலை கூட கட்டமுடியும்.அவர்களின் தோஷத்தை போக்குவதற்க்கு கூட இப்படி கடவுள் வழிச்செய்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அனைத்து தெய்வங்களும் பாம்பு வடிவம் தான் அதனால் இவர்களை வைத்து கோவிலை கட்டமுடியும்.

உங்களின் ஊர்களில் கோவில் தடைபெற்று நின்றால் இப்படிபட்ட கிரகநிலைகளை கொண்டவர்களை வைத்து அந்த கோவிலை மறுபடியும் தொடங்க ஆரம்பித்துவிடுங்கள்.ஒரு ஊரில் கோவில தடைப்பெற்று நின்றால் அந்த ஊரில் உள்ள மக்கள் பாதிப்படைவார்கள்.

கோவில் கட்டும்பொழுது பல நபர்கள் தகராறு செய்கிறார்கள். இதனையும் தவிர்க்க பார்க்கவேண்டும். சின்ன பிரச்சினை கூட பெரிய அளவில் கிளப்பிக்கொண்டு கோவிலை கட்டவிடமால் தடைச்செய்துக்கொண்டு இருப்பதும் தவறான ஒன்று. உங்களின் வீரத்தை எல்லாம் கோவில் கட்டுவதில் காட்டவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: