Followers

Tuesday, July 23, 2013

ஆடி செவ்வாய்


வணக்கம் நண்பர்களே!
                     செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனின் கோவிலுக்கு நான் செல்வேன். என்னை போல என்னுடைய வாடிக்கையாளர்களையும் கோவிலுக்கு செல்ல சொல்லுவது எனது வாடிக்கையான ஒரு செயல்.

வெள்ளிக்கிழமை அன்று நான் கோவிலுக்கு செல்லாமல் இருந்தாலும் செவ்வாய்கிழமை அன்று கண்டிப்பாக எப்படியாவது கோவிலுக்கு செல்லுவது என்னுடைய வழக்கம். செவ்வாய்கிழமை அன்று அம்மனை பார்க்க எனக்கு பிடிக்கும். செவ்வாய்கிழமை கோபமாக அம்மன் இருந்தாலும் அன்னையை பார்க்க ஆசைப்படுவேன்.

சென்னையில் இருப்பதால் காளிகாம்பாளை தரிசனம் செய்வது நமது கடமை மற்றும் எனது பாதுகாப்பு கூட என்பதால் காளிகாம்பாளை பார்க்க செல்வது உண்டு. இந்த அம்மனைப்பற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லிருந்தாலும் அங்கு பல சிறப்பு இருக்கிறது. எனக்கு ஒரு மணி நேரம் ஒய்வு கிடைத்தாலும் உடனே அங்கு சென்று தரிசித்துவிட்டு வந்துவிடுவேன். அது எந்த நாளாக இருந்தாலும் நான் செல்வது வழக்கம்.

எனக்கு காளிகாம்பாளை பார்க்க பார்க்க எனக்கு ஆனந்தம் பொங்கும். நான் வேண்டுதலை வைப்பதில்லை என்பதால் அன்னை பார்க்க மட்டும் செல்லுவது எனக்கு பிடிக்கும். நான் பார்த்து திரும்புவதற்க்குள் அன்னை எனக்கு என்ன தேவையே அதனை கொடுத்துவிடுவாள். நான் அன்று வேண்டுதலை வைப்பதில்லை ஆனால் நான் கேட்காமலே கொடுத்துவிடுவாள்.

நீங்கள் சென்னையில் வசித்து வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக சென்று பார்த்துவிட்டு வாருங்கள். அவளை தரிசிக்க பல மன்னர்களே வந்து சென்று இருக்கிறார்கள். நாம் எல்லாம் வெறும் தூசு அப்படிபட்டவளை நீங்கள் தரிசினம் செய்யாமல் இருக்ககூடாது அதனால் சென்று வணங்கிவாருங்கள்.செவ்வாய்கிழமை அதுவும் ஆடிசெவ்வாய்கிழமை கண்டிப்பாக உங்களின் அருகில் இருக்கும் அம்மனை தரிசிக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: