Followers

Wednesday, July 31, 2013

காலசர்ப்பதோஷம்


வணக்கம் நண்பர்களே!
                             காலசர்ப்பதோஷம் இதனைப்பற்றி பல பேர் பல விதமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் மாட்டிக்கொண்டுவிட்டால் அது காலசர்ப்பதோஷம் எனப்படுகிறது. இரு கிரகங்களுக்குள் சந்திரன் மட்டும் வெளியில் நின்று பிறகு உள்ள கிரகங்கள் உள்ளே மாட்டினாலும் அது காலசர்ப்பதோஷம் எனப்படுகிறது.

காலசர்ப்பதோஷம் ஒரு ஜாதகருக்கு ஏற்படும்பொழுது அவர் முப்பத்திரண்டு வயது வரை ஒன்றும் செய்யமுடியாது என்றும் சொல்லுகிறார்கள். ஒரு சிலர் முப்பத்தி ஆறு வயது வரை வேலை செய்யது என்று சொல்லுகிறார்கள். இது தவறான ஒன்று.

ஒருவன் பிறந்தால் அவன் உயிர் வாழவேண்டும். அவன் தினந்தோறும் சாப்பிடவேண்டும். அவன் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் செரிக்க வேண்டும். இளமையில் கல்விகற்க வேண்டும் இப்படி ஏகாப்பட்ட வேலைகளை அந்தந்த வீடுகள் வேலை செய்யவில்லை என்றால் ஒருவன் உயிர் வாழமுடியாது.அனைத்து கிரகங்களும் வேலை செய்யும். பிறகு காலசர்ப்பதோஷத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா.

இரண்டு விஷத்திற்க்கு இடையில் எல்லாம் கிரகங்களும் வேலை செய்ய வேண்டியுள்ளதால் அனைத்து கிரகங்களும் தன்னுடைய சுயதன்மையை இழக்கும். காலசர்ப்பதோஷம் உள்ளவர்கள் பார்த்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அனைத்து செயல்களிலும் வித்தியாசமாக செய்வார்கள். ஊரோடு வாழமால் ஒதுங்கி வாழுவார்கள். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அனைத்து வேலையும் செய்வார்கள்.அவர்களின் செயல்பாடு ஒரு வித பைத்தியம்போல் இருக்கும். 

நான் பார்த்த ஜாதகங்களில் 30 வயதுக்கு மேல் தெளிவு ஏற்படுகிறது. 35 வயதுக்கு மேல் ஒரு நல்ல வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். பொதுவாக இளமையில் ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவர் 35 வயதுக்கு மேல் நன்றாக வாழ்வதில்லை. இளமையில் வறுமையில் வாழ்ந்தால் அவர்கள் 35 வயதுக்கு மேல் நன்றாக வாழ்கிறார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

கார்த்திக் சரவணன் said...

ஐயா வணக்கம், லக்கினம் மட்டும் ராகு கேதுவுக்கு வெளியே தனித்திருந்தாலும் அது மேற்கண்ட தோஷம் தானே?

rajeshsubbu said...

வணக்கம் அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு சில ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் சுயமுயற்சியால் அதனை வென்று வந்து இருக்கிறார்கள். லக்கினம் உடல் அல்லவா. உடல் வெளியில் இருப்பதால் அப்படி நடந்து இருக்கிறது. எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். நன்றி