Followers

Monday, July 1, 2013

மாந்தி எட்டில் உதாரண ஜாதகம்


வணக்கம் நண்பர்களே!
                     இந்த ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். லக்கினாதிபதியான செவ்வாய் ஆறாம் வீட்டில் போய் அமர்ந்துவிட்டார்.  சனி மற்றும் சந்திரனோடு அமர்ந்திருக்கிறார். குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார். ஏழில் அமைந்த குருவால் இளமையில் திருமணம் நடைபெறறது.

குரு ஏழில் அமர்பவர்களுக்கு இளமையில் திருமணம் நடைபெற்றுவிடும். பல ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். இவருக்கும் திருமணம் இளமையில் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தால் வந்தது இவரின் வாழ்வில் சூறாவளி. இவரின் கணவருக்கும் இவருக்கும் எப்பொழுதும் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். 

இந்த பெண் சும்மா இருப்பதில்லை அவரை எப்பொழுதும் வம்பு இழுத்துக்கொண்டே இருக்கும். அவர் இந்த பெண்ணோடு வாழ விரும்பாமல் இவரை விட்டு பல நாட்கள் வெளியில் சென்று தங்கிவிட்டார். கடைசியில் இருவருக்கும் விவாகாரத்து பெறும் நிலை ஏற்பட்டது.ஏழாவது வீட்டு அதிபதி விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குருவும் சுக்கிரனும் பரிவர்ததனையில் இருக்கிறார் இருவரும் அந்தளவுக்கு நல்லது செய்யவி்ல்லை. 

சொல்ல வந்த செய்தியை பார்க்கலாம்.

ஒரு பெண்ணிற்க்கு எட்டாவது வீடு என்பது மாங்கல்ய ஸ்தானம். இந்த பெண்ணின் ஜாதகத்தில் எட்டாவது வீட்டில் மாந்தி அமர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மாந்தியைப்பற்றி அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் அதற்க்கு காரணம் என்ன என்று உங்களுக்கு ஏற்கனவே சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன். மாந்தியையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது ஏன் என்றால் இவர் போல் கெடுதலை வேறு யாரும் செய்யமுடியாது அந்தளவுக்கு கெடுதலை கொடுத்துவிடுவார்.

எட்டாவது வீட்டில் மாந்தி அமர்ந்து தாலி பாக்கியத்தை பறித்துவிட்டார். இவராகவே ஒரு நாள் தாலியை கழட்டி வீசிவிட்டார் அதுவும் இவரின் கணவனுக்கு எதிராகவே செய்தார்.இருவருக்கும் விவாகாரத்து நடந்துவிட்டது. எட்டாவது வீட்டு அதிபதியும் ஆறாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். 

ஏழாவது வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றாலும் இவரை திருமணம் செய்தவுடன் இவரின் கணவர் நல்ல நிலைக்கு வந்தார். ஜாதகருக்கு ஒன்றும் செய்யவில்லை. எட்டாவது வீட்டு அதிபதியுடன் சனி மற்றும் சந்திரன் சேர்ந்ததால் மனது ரீதியாக பாதிப்பும் அதிகம் ஏற்படுத்திவிட்டார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

கார்த்திக் சரவணன் said...

புரிந்தது ஐயா.. ஏழு மற்றும் பன்னிரண்டாம் வீட்டதிபதிகளின் பரிவர்த்தனை மற்றும் எட்டாம் வீட்டில் அமர்ந்த மாந்தியுமே காரணம்.... இவருக்கு இன்னொரு திருமணம் உண்டா என்பதை எப்படிக் கண்டறிவது?

rajeshsubbu said...

வணக்கம்
இரண்டாவது வீட்டை வைத்துப்பார்க்கலாம். அதனைப்பற்றி எல்லாம் விரிவாக பார்க்கலாம். இதுவரை இந்த நபருக்கு திருமணம் நடைபெறவில்லை