Followers

Wednesday, July 17, 2013

ஆத்மசுத்தி விளக்கம்


வணக்கம் நண்பர்களே !
                    தசாவைப்பற்றி கேள்வி ஒன்றை கேட்டுருந்தேன். பெரும்பாலான நண்பர்கள் அனைவரும் பதில் தந்தார்கள். பதிலை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அதனைப்பற்றி தசாநாதன் என்ற பதிவில் பதிலை தருகிறேன்.

ஆத்மசுத்தி என்ற பதிவை எழுதியிருந்தேன். அதற்க்கும் விளக்கம் கேட்டார்கள். முதலி்ல் ஆத்மாசுத்தியை பற்றி சொல்லிவிடலாம் ஏன் என்றால் இங்கு இது வரை சிஸ்டம் ரெடியாகவில்லை. இன்று தான் ரெடியாகும் என்று நினைக்கிறேன்.

ஆத்மசுத்தி எப்படி செய்வது என்று சிலர் கேட்டார்கள். தன் ஆத்மா சுத்தமாக இருந்தால் மட்டுமே அடுத்தவர்களின் ஆத்மாவை சுத்தம் செய்யமுடியும். இதனை செய்ய பல வழிகளை பின்பற்றுவார்கள். ஒருவரை உட்காரவைத்து அவரை சுற்றி தீ வளர்த்து மந்திரங்களை ஓதி செய்வார்கள். ஒரு சிலரை அமர வைத்து தனியாக அக்னி வளர்த்து அதன் வழியாகவும் செய்வார்கள். இது தாந்தீரிக முறையில் செய்வது நல்ல முறையில் பலனை தருகிறது.

ஆத்மசுத்தியை போல் ஆத்மவிசுத்தி என்ற ஒன்று இருக்கிறது. ஆத்மசுத்தியில் ஒரு சில கர்மாக்களை எடுக்காமல் விட்டுவிடுவார்கள். ஆத்மவிசுத்தியில் அனைத்து கர்மாவையும் எடுத்துவிடுவார்கள். முழுமையாக எடுக்கும் முறை. இந்த முறைகள் எல்லாம் இன்று செய்வதற்க்கு ஆட்கள் கிடையாது. அப்படி செய்பவர்கள் இருந்தால் அவர்கள் கேட்கும் பணம் மிக மிக அதிகமாக இருக்கும்.

ஒரு மனிதனுக்கு என்று ஆத்மசுத்தி செய்வது போல் கோவிலுக்கும் சுத்தி செய்வார்கள். அந்த கோவிலில் ஏற்பட்டு இருக்கும் மாசுக்களை அகற்ற கோவிலுக்கும் செய்வார்கள். கோவிலுக்கும் சுத்தி செய்வதால் அனைத்து சக்தியும் வெளிப்படும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: