Followers

Saturday, July 6, 2013

சனி்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                     உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் கெடுதல் தரும் நிலையில் இருந்தாலோ அல்லது கோச்சாரப்படி கெடுதலை தந்தாலோ அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் நேரிடையாக சனிபகவானை வழிபடுவதை விட ஆஞ்சநேயரை வழிப்பட்டால் சனியின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு கோச்சாரப்படி கெடுதலை தரும் நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்துவிடவேண்டும். ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்யும்பொழுது சனியின் உக்கிரத்தை குறைத்துவிடுவார். முதலில் உங்கள் அனுமனுக்கு வெண்ணை காப்பு செலுத்திவிட்டால் பிறகு வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்பன் சனிபகவானை வழிபடலாம். அனுமன் உங்களை சனியின் பிடியில் இருந்து காப்பாற்றிவிடுவான்.

செவ்வாய் வீட்டை ராசியாக பெற்றவர்களுக்கு ஏழரை சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி. அஷ்டமசனி வந்தால் உடனே ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செலுத்திவிட்டு தான் பிற தெய்வங்களை நீங்கள் வணங்கவேண்டும்.

சனியின் பிடியில் இருக்கும்பொழுது முருகனை வணங்காதீர்கள் அப்படி வணங்கினால் உடனே கை அல்லது காலை உடைத்துவிடுவார் சனி பகவான் பல பேரை நான் பார்த்தது உண்டு.முருகன் மீது அதிக பக்தி உடையவர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர்களின் கை கால்கள் உடைந்திருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது இந்த அனுபவத்தை அவர்கள் பெற்று இருப்பார்கள் அதற்க்கு காரணம் சனிபகவான். 

பெரிய சாமியார்களுக்கு கூட இந்த அனுபவம் நடந்திருக்கிறது.அனைத்தும் சனிபகவானின் லீலைகள். இவர்கள் சனியின் பிடிவரும்பொழுது ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்வது அவசியமான ஒன்று.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

7 comments:

S.perumal shivan (kaadhalshivan) said...

murugarai vida sani valimaiyanavara? vanaginathirkkaaga murugar kaappaatra maattaaraa? appa saniyai vananginaal murugar etrukkolvaarraa? kaduvul enraal enna eppadi oruvarukkoruvar poramaikondal manithan?

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே
சனியின் பிடியில் இருக்கும்பொழுது அவரின் ஒட்டுமொத்த ஆளுமையின் கீழ் வந்துவிடுவீர்கள். அந்த நேரத்தில் பகை கிரகத்தை வணங்கும்பொழுது பிரச்சினை ஏற்படும் அதனால் இப்படி சொன்னேன். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொன்றும் பகைபோல் தான் வேலை செய்யும். ஒரு சில கிரகங்களுக்குள் ஒற்றுமை இருக்கும். இது பெரிய சப்ஜெக்ட் பதிவில் தான் பதிலை தரவேண்டும் நண்பரே

KJ said...

Sir, My name is sathishkumar. i am wearing om ring with murugan vel. In two months i am going to face sani dasa. I am magara lagna. Sani is in thulam. Shall i wear that ring. Nava kol magilnthu nanmai alithidum allava. However he is lord. Pl explain.

geemanika said...

hi sir,
I am from Malaysia. I'm sorry that I don't know what is vennai kaappu.வெண்ணை காப்பு.Please explain how to do that. Then I shall perforn the puja in my local temple.I am currently undergoing 7 1/2 years of sani dasa. I am viruchaga rasi kumbha lagna.

Thank you.

geemanika said...

Hi sir,
I am from Malaysia. I don't know what is வெண்ணை காப்பு. Please explain on how shall I perform it. I am currently undergoing 7 1/2 years of sani dasa. I am viruchaga rasi kumbha lagna.

Thank you.

பிரசன்ன குமார். மு said...

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

அப்படியிருக்கையில் எப்படி அண்ணா தாங்கள் கூறுவது...

இச்சிறியவனின் கருத்தில் ஏதாவது பிழையிருந்தால் மன்னிக்கவும் அண்ணா...

பிரசன்ன குமார். மு said...

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

அப்படியிருக்கையில் எப்படி அண்ணா... விளக்கம் தந்தால் அனைவருக்கும் நல்லதாக இருக்கும்...

இச்சிறியவனின் கேள்வியில் பிழையிருந்தால் மன்னிக்கவும்..