Followers

Saturday, July 13, 2013

வியாழக்கிழமை எதற்கு?


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனின் பூஜை ஏன் வியாழக்கிழமை வைத்தீர்கள் என்று நண்பர் செந்தில்குமார் அவர்கள் கேட்டார். அவரிடம் சொல்லும்போது ஏன் வைத்தேன் என்று பதிவில் தருகிறேன் என்றேன். அவர் வழியாக உங்களுக்கும் தகவலை தரலாம் என்று பதிவில் தருகிறேன்.

வியாழக்கிழமை குருவிற்க்கு உகந்த நாள். குரு பூர்வபுண்ணியத்திற்க்கு காரகம் வகிக்கிறவர். குருவின் கீழ் தான் நமது பூர்வபுண்ணியம் இருப்பதால் நமது பூர்வபுண்ணியத்தின் பலனை வைத்துக்கொண்டு அதே நேரத்தில் பூர்வபுண்ணியத்தின் குறைபாட்டை நீக்கவும் வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்தேன். நமது பூர்வபுண்ணியத்தை வைத்துக்கொண்டு குலதெய்வத்திற்க்கு செல்லும்பொழுது அனைவரின் ஆசியும் நமக்கு கிடைக்கும் அதனால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்தேன்.

சரியாக வியாழக்கிழமை 6 மணி முதல் 7 மணிக்குள் இஷ்டத்தெய்வத்திற்க்கு வழிபாட்டை முடித்துவிட்டேன் இதற்கு காரணம் குருவின் ஒரை என்பதால் அந்த நேரத்தில் முடித்தேன். எந்த ஒரு செயலும் நாம் செய்வதற்க்கு குரு முக்கியமான ஒன்று.குருவின் பலனில் செய்யும் போது அதிகமான பலன் நமக்கு கிடைக்கும்.

மாலையில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு கோவிலுக்கு சென்று பூஜை செய்தேன். மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று எனது வீட்டில் அம்மனுக்கு பூஜை செய்தேன். இரண்டு நாட்களாக பிரித்து பூஜையை செய்தேன். வீட்டில் அம்மனுக்கு பூஜை செய்வது என்பது மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. முன்பு எல்லாம் எங்களின் வீட்டில் அடிக்கடி இந்த பூஜையை செய்வார்கள். இந்த பூஜையைப்பற்றி சொல்லுகிறேன் பாருங்கள். இதனைப்பற்றி பழைய பதிவுகளில் எழுதிய ஞாபகம் இருக்கிறது. 

பச்சை பரப்புதல் என்று இந்த பூஜைக்கு பெயர். அதாவது பூஜை அறையில் விளக்கை ஏற்றி வாழை இலையில் பச்சை அரிசியை நிரப்பி (அந்த பச்சை அரிசி ஈரபதமாக இருக்க வேண்டும்) வெல்லம் கலந்து அதன் மேல் மாவிளக்கு வைத்து அதன் மேல் விளக்கை ஏற்றி பூஜை செய்வோம் அப்படி செய்தால் நினைத்ததை அம்மன் தந்துவிடும். நான் பல காரியங்கள் சாதித்தது இந்த பூஜை முறையை செய்து தான். அம்மன் உடனே வந்து நமது கோரிக்கையை நிறைவேற்றுவாள். இந்த பூஜையை மட்டும் வெள்ளிக்கிழமை அன்று செய்தேன்.

நமது அம்மனுக்கு குலதெய்வ பூஜை செய்வதாக இருந்தால் அது திங்கள்கிழமை செய்வார்கள். திங்கள்கிழமை அப்படி ஒரு விஷேசமான நாளாக அந்த அம்மனுக்கு இருக்கும். எதை செய்தாலும் அதனை நாள் பார்த்து நேரம் பார்த்து செய்யும்பொழுது நாம் நினைத்தை நமக்கு கிடைத்துவிடும் நடத்திக்கொடுத்துவிடும்.

நடந்து முடிந்த பூஜை மிகச்சிறப்பாக நடந்துமுடிந்தது. என்ன ஒரு குறை என்றால் அங்கு அன்னதானம் சாப்பிடுவதற்க்கு ஆட்கள் வரமாட்டுகிறார்கள். என்ன செய்து அடுத்தமுறையில் இருந்து இதனை குறைத்துக்கொண்டு பூஜை மட்டும் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்  

அடுத்த மாதம் ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமான மாதம். எப்படி செய்யலாம் என்று இப்பொழுது இருந்தே யோசனை செய்துக்கொண்டு இருக்கிறேன். பல நண்பர்கள் இப்பொழுதே கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பார்க்கலாம் அம்மனின் முடிவை எதிர்நோக்கி இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: