Followers

Monday, July 15, 2013

ஆத்மசுத்தி


வணக்கம் நண்பர்களே!
                    ஆத்மா சுத்தி என்று கேள்விபட்டு இருப்பீர்கள். பிரபலமானவர்கள் பலபேர் இதனை செய்வதையும் நீங்கள் பார்த்து இருக்கலாம். இதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

கடந்த மாதம் ஒருவரை நான் பார்க்கும்பொழுது இதனை செய்ய சொன்னேன். அவரின் ஆத்மா பல வித பாவங்களை சுமந்து இருப்பதை பார்த்துவிட்டு இதனை செய்து பாருங்கள் என்று சொல்லிருந்தேன். ஆத்மா பல ஜென்மங்கள் எடுப்பதை சொல்லுவதே நமது மதத்தின் சாரம். பிறவி எடுக்கும் ஆத்மா ஒவ்வொரு ஜென்மத்திலும் புண்ணியங்கள் செய்தாலும் பாவங்களையும் சுமக்கிறது.

அப்படி சேர்க்கும் பாவங்களை சுத்தம் செய்வதற்க்கு என்று செய்யப்படும் ஒரு பரிகாரம்  தான் ஆத்ம சுத்தி. ஆத்மசுத்தி செய்வதால் உங்களின் ஆத்மாவில் தங்கியிருக்கும் பீடைகள் விலகும். ஆத்மா பரிசுத்தமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆத்மசுத்தி செய்பவர்கள் மிககுறைவு. இவர்களை தேடிபிடிப்பது என்பது கடினமான ஒன்று. ஆன்மீகத்தில் நல்ல நிலையில் அவர்கள் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களால் மட்டுமே பிறரின் ஆத்மாவை சுத்தம் செய்ய முடியும்.

ஆத்மசுத்தி செய்பவர்கள் பிரம்சாரியாக இருந்தால் நல்லது. சந்தியாசியாக இருந்தாலும் நல்லது. இப்படிப்பட்டவர்கள் தான் ஆத்மசுத்தி செய்வதற்க்கு ஏற்றவர்கள். பொதுவாக பரிகாரம் செய்பவர்கள் இல்லறவாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பவர்களாக பார்த்து நீங்கள் பரிகாரம் செய்தால் நல்ல பலனை நீங்கள் அடையலாம்.

ஒவ்வொருவரும் உங்களுக்கு நல்ல காலம் வரும்பொழுது ஆத்மசுத்தி செய்துக்கொள்ளுங்கள்.  முற்பிறவி பாவத்தை போக்குவதற்க்கு இது ஒரு நல்ல வழி.உங்களின் பாவத்தை போக்கி நல்லமுறையில் உங்களின் வாழ்க்கை அமைத்துக்கொண்டு செல்லபோகும் உலகத்திற்க்கும் அது ஒரு நல்லவழியை அது தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

Anonymous said...

நீங்கள் சொல்வது 'ஆரா கிளென்சிங் ' தானே ?

rajeshsubbu said...

வணக்கம் ஆரா கிளென்சிங் என்பது சம்பந்தப்பட்ட நபரை செய்துகொள்வது. இந்த முறையில் சுத்தம் செய்வது கடினம். ஏன் என்றால் ஒருத்தர் நோயுடன் இருக்கும்பொழுது அவர்களே செய்வது கடினமான காரியம். வெளிநபர் மூலம் செய்யும்பொழுது ஆத்மா தூய்மை அடையும். நீங்களே பார்த்து இருக்கலாம் ஒரு சாமியார் பிரச்சினையில் இருக்கும்பொழுது அவரை சுற்றி ஹேமம் செய்தார்களே தெரியுமா அந்த மாதிரி இது

rajeshsubbu said...

வணக்கம் ஆரா கிளென்சிங் என்பது சம்பந்தப்பட்ட நபரை செய்துகொள்வது. இந்த முறையில் சுத்தம் செய்வது கடினம். ஏன் என்றால் ஒருத்தர் நோயுடன் இருக்கும்பொழுது அவர்களே செய்வது கடினமான காரியம். வெளிநபர் மூலம் செய்யும்பொழுது ஆத்மா தூய்மை அடையும். நீங்களே பார்த்து இருக்கலாம் ஒரு சாமியார் பிரச்சினையில் இருக்கும்பொழுது அவரை சுற்றி ஹேமம் செய்தார்களே தெரியுமா அந்த மாதிரி இது

sri said...

aathmasuththi enral enna? eppadi seivathu? thayavu seithu villakkam solveerkalaa?