Followers

Tuesday, December 24, 2013

குரு தசா பலன்கள் பகுதி 54


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனிப்புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். இனி குரு தசாவில் புதன் புத்தியைப்பற்றி பார்ப்போம்.

குரு கிரகம் நிதானமான புத்திக்கு காரகம் வகிக்கும் என்றால் புதன் புத்திசாலியான புத்தியை வழங்குவதில் மிகவும் வல்லவன். எப்படிப்பட்ட சிக்கலையும் தீர்க்கும் அதிநவீன புத்திக்கு காரகன் வகிக்கிறார். கலைகளை வெளிப்படுத்துவதில் வல்லவர்.

குரு சுபகிரகம் அதேப்போல் பாவிகள் கூட சேராத புதனும் சுபக்கிரகம். இருசுபக்கிரகங்கள் இணைந்து பணி செய்யும்பொழுது நமக்கு நல்ல பலனை தருவார்கள்.புதன் இரட்டை கிரகம் என்பதால் அந்த கிரகம் கொடுக்கும் நல்ல பலனும் இரட்டையாகவே இருக்கும். அதனால் நிம்மதியோடு இந்த புத்தியை நாம் எதிர்க்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

புதன்கிரகம் இரட்டை கிரகம் என்றாலும் அது கெட்டுவிட்டால் அல்லது தீயகிரகங்களின் பார்வையில் படும்பொழுது அது தன் இயல்பை மாற்றக்கூடிய ஒன்று. அந்த நேரத்தில் புத்தி குறுக்கு வழியை ஏற்படுத்தும் அது மட்டுமே நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

மனிதனுக்கு நல்லபுத்தி இருக்கும்பொழுது நல்ல செயலை செய்வான். அவனுக்கு கர்மா ஏற்படாது. குறுக்குபுத்தி ஏற்பட்டால் கர்மாவை ஏற்றிக்கொள்வதும் இல்லாமல் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்வான். புதன் எப்படி எல்லாம் தன்னுடைய புத்தியில் பலனை தரும் என்பதை இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: