Followers

Friday, December 20, 2013

பெரிய பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சாதாரணமான வேலையாக இருந்தால் நாங்கள் செய்யும் பூஜை மிகவும் குறைவான செலவில் பூஜையை செய்வோம். அதே நேரத்தில் பெரிய வேலையாக இருந்தால் மிகப் பிரமாண்டமாக இருக்கும்.

நான் ஏழ்மையாக இருப்பவர்களாக இருந்தால் மிக குறைந்த செலவில் பூஜையை செய்து விடுவேன். அவர்களின் கோரிக்கையும் ஒரு அளவோடு இருக்கும் அதே நேரத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருக்கின்றது என்றால் பூஜை மிக அதிக அளவு செலவு செய்து அதை வைத்திருப்பேன்.

எனது குருநாதர் கூட பெரிய வேலைகள் செய்வதற்க்கு பெரிய அளவில் பூஜை செய் கண்டிப்பாக பெரிய அளவில் செய்யும்பொழுது மட்டுமே காரியம் சித்தியாகும் என்பார். அது உண்மையான விசயம். 

பெரிய அளவில் செய்யும்பொழுது அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. அதனை வைத்து பெரிய காரியத்தை எளிதில் சாதிக்கமுடியும். நமக்கு கஷ்டம் இருக்காது. 

நான் ஒரு சில விசயங்களுக்கு செய்யும்பொழுது மிகவும் நேர்த்தியாக வித்தியாசமான முறையில் எல்லாம் பூஜை இருக்கும். அதற்கு விருப்பமான பொருட்கள் அனைத்தும் அங்கு இருக்கும்.

நீங்களும் உங்களின் வேண்டுதலுக்கு உங்களின் குலதெய்வத்திடம் கோரிக்கை வைத்தால் பெரிய அளவில் உள்ள விசயமாக இருந்தால் பெரிய அளவில் பூஜையை செய்யுங்கள். அப்பொழுது எளிதில் காரியம் வெற்றி அடைந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: