Followers

Sunday, December 22, 2013

குரு தசா பலன்கள் பகுதி 48


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனிபுத்தியை பற்றி பார்த்து வருகிறோம். சனிக்கிரகம் பதினோராவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தினால் பலன் எப்படி தரும் என்பதை பார்க்கலாம்.

சனிக்கிரகம் பதினோராவது வீட்டில் இருக்கும்பொழுது நல்ல லாபத்தை கொடுக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பதவி உயர்வு வரும். ஆன்மீகவாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆன்மீகவாதிகளை சந்தித்து அவர்கள் வழியாக ஆன்மீகத்தை அனுபவிக்க முடியும்.

சனிக்கிரகம் பதினோராவது வீட்டில் அமர்ந்து மூன்றாவது பார்வையாக லக்கினத்தை பார்த்து புத்தியை நடத்தும்பொழுது உடல்நிலையில் பாதிப்பை அவ்வப்பொழுது தருவார். சோம்பேரிதனத்தை ஏற்படுத்திவிடுவார்.

சனிக்கிரகம் பதினோராவது வீட்டில் இருந்து நேரடியான பார்வையில் பூர்வபுண்ணியத்தை பார்ப்பதால் மந்தநிலை ஏற்படும். செய்கின்ற வேலையில் தடைகள் ஏற்படுத்திவிடுவார்.

சனிக்கிரகம் பதினோராவது வீட்டில் அமர்ந்து பத்தாவது பார்வையில் எட்டாவது வீட்டை பார்ப்பார். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். வெளிபயணம் செய்யும்பொழுது எச்சரிக்கை தேவை

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: