Followers

Sunday, December 22, 2013

குரு தசா பலன்கள் பகுதி 46


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனியின் புத்தியை பார்த்து வருகிறோம். சனிக்கிரகம் குருவிற்க்கு ஒன்பதாவது வீட்டில் நின்றால் என்ன பலன தரும் என்பதை பார்க்கலாம்.

ஒன்பதாவது வீட்டில் சனிக்கிரகம் தன்னுடைய புத்தியின்பொழுது வெளிநாட்டு பயணங்களை தருவார். வெளிநாடு சென்று வேலை செய்வதற்க்கும் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்க்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார். ஊரில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வைப்பார். 

ஒன்பதாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் தன்னுடைய மூன்றாவது பார்வையில் லாபஸ்தானத்தை பார்க்கும் வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.  சகோதரர்கள் வழியாக உதவி கிடைக்கும். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்து உங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள்.

ஒன்பதாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் தன்னுடைய நேரடியான பார்வையால் மூன்றாவது வீட்டை பார்க்கும் பணவர்த்தக தொழில் சிறக்கும். அடிக்கடி பயணங்கள் ஏற்படுத்திக்கொடுப்பார்.

ஒன்பதாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் தன்னுடைய பத்தாவது பார்வையால் ஆறாவது வீட்டை பார்க்கும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் உதவி புரிவார்கள். கடன் தொந்தரவு இருக்காது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: