Followers

Monday, December 30, 2013

இரயில் பயண அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இரயில் பயணங்களில் செல்லும்பொழுது எழுதியவை படித்துவிட்டு பல நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு என்னிடம் உண்மை தான் என்று சொல்லுகிறார்கள். முதலில் நாம் திருந்தவேண்டும். நாம் அடுத்தவர்களிடம் பேச ஆரம்பித்தால் தான் அனைவரும் பேச ஆரம்பிப்பார்கள். மார்க்கெட்டிங் செய்பவர்கள் எப்பொழுதாவது தான் தொல்லைக்கொடுப்பார்கள். பயணம் செய்யும் அனைவரும் மார்க்கெட்டிங் செய்பவர்கள் கிடையாது. 

சாதாரண வகுப்பில் செல்பவர்கள் அந்த பயணத்தை இனியாக்குவார்கள். அனைவருடனும் சகசமாக பழகுவார்கள். அப்பாவித்தனம் வெளிப்படும். உயர்வகுப்பில் செல்பவர்கள் அனைவரும் வில்லங்கத்தை தன்னகத்தே கொண்டு செல்பவராக இருக்கின்றார்கள். 

இதனை எழுத காரணம் மக்கள் அனைவரும் எலெக்ட்ரானிக் உடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை சொல்லுவதற்க்கு மட்டுமே. இப்பொழுது திருமணம் செய்வதற்க்கு எல்லாம் பயப்படுகிறார்கள் ஏன் என்றால் வரும் நபர் எப்படிப்பட்டவரோ அவருடன் எப்படி பழகுவது என்று பயப்படுகிறார்கள்.

ஆணும் பெண்ணும் செல்போனில் தான் குடும்பம் நடத்துகிறார்கள். நேரில் பார்த்து பேசுவது குறைந்து வருகிறது. உயிர் தன்மை வேண்டும் என்றால் மனிதன் மனிதனோடு பழகவேண்டும். மனிதன் மனித தன்மையோடு பழக ஆரம்பித்தால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




No comments: