Followers

Friday, December 27, 2013

குரு தசா பலன்கள் பகுதி 63


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் இனி கேது புத்தியை நாம் பார்க்கலாம்.  மொத்த நாட்கள் 11 மாதம் 6 நாட்கள் மட்டுமே. இந்த காலக்கட்டத்தில் நல்லதை விட கெட்டதை அதிகமாக தருவார். இரண்டு பேரும் பக்திக்கு உடையவர் அல்லவா.பக்தியை நோக்கி அதிகம் காலடி எடுத்துவைக்கவிடுவார். 

ஒரு சிலருக்கு நல்லதும் நடைபெறும் அது கேது அமரும் வீட்டை பொருத்தது. ஒரு சிலருக்கு மகரத்தில் கேது அமர்ந்தால் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த காலகட்டத்தில் அடைவார்கள்.

ஒரு சிலருக்கு கேது புத்தியில் அதிகமான பிரச்சினைகளை சந்திப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் பழியை இவர்கள் மேல் போட்டுவிட்டு அதனை ரசிப்பார்கள்.இவர்களுக்கு என்ன செய்து என்றே தெரியாது. மாட்டிக்கொண்டு முழிப்பார்கள். ஒரு சிலருக்கு உடலில் பலகீனம் ஏற்படும். அங்கம் இழப்பு கூட ஏற்பட வைக்கும்.எதிர்களின் தொந்தரவு இருக்கும்.

கேது நன்றாக இருக்கும்பட்சத்தில் மடாதிபதிகளின் ஆதரவு அரசாங்கம் வழியாக உங்களுக்கு நல்ல உதவி வாகனங்கள் மற்றும் நல்லவிதமான உபசரிப்பு போன்றவை நடைபெறும்.

இனி வரும் பதிவுகளில் தொடர்ந்து கேது என்ன என்ன எல்லாம் செய்யும் என்பதை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: