Followers

Monday, October 6, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      நண்பர் கிருஷ்ணப்ப சரவணனோடு ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்பொழுது அவரிடம் ஒரு கேள்வியை கேட்டேன். அவர் அளித்த பதிலை உங்களுக்கு தருகிறேன்.

பெருமாள் கோவிலுக்கு சென்று உட்கார கூடாது. சிவன் கோவிலுக்கு சென்றால் அமர்ந்துவிட்டு வரவேண்டும் என்று ஏன் சொல்லுகிறார்கள் என்று கேட்டேன்.

அவர் சொன்ன பதில் சிவன் கோவிலில் சிவனின் பூதகணங்கள் இருக்கும். நாம் சிவன் கோவிலில் அமராமல் வீட்டிற்க்கு வந்தால் அந்த பூதகணங்களும் நமது வீட்டிற்க்கு வந்துவிடும். சிவனின் பூதகணங்கள் நம் வீட்டிற்க்கு வருவது நல்லதல்ல அதனால் சிவனின் கோவிலில் அமர்ந்துவிட்டு வரவேண்டும்.

பெருமாள் கோவிலில் உள்ள பூதகணங்கள் நாம் வீட்டிற்க்கு வருவது நல்லது. நாம் பெருமாள் கோவிலில் அமர்ந்தால் திரும்பி அங்கேயே சென்று விடும். நமது வீட்டிற்க்கு அந்த பூதகணங்கள் வரவேண்டும் என்பதற்க்காக நாம் பெருமாள் கோவிலில் அமரகூடாது என்றார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.