வணக்கம் நண்பர்களே!
பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்தால் வீடு நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்று சொல்கிறீர்கள். சமீப காலமாக பைரவர் வழிபாடு பிரபலமாகி வருகிறது. சில வலைத் தளங்களில் பைரவர் வழிபாடு ஒன்றையே நோக்கமாக கொண்டு எழுதுகிறார்கள். அசைவத்தை முழுமையாக கைவிட்டால்தான் பலன் தரும் என்றும் சொல்கிறார்கள். சொர்ணாகர்ஷன பைரவரை வழிபடலாமா? இல்லை எந்த பைரவரையுமே வழிபடக்கூடாதா?
கடவுள் என்பவர் காப்பாற்றுவதற்குத்தானே. அப்படியிருக்க பைரவர் வழிபாடு எப்படி குடும்பத்தை பிரிக்கும்?மேலும் பைரவர் சனி பகவானின் குரு . சனி பகவானின் பாதிப்புகள் குறைய அவரைத்தானே வணங்க வேண்டும். கோவிலில் வைத்து வணங்கலாம் அல்லவா? அப்பொழுது மட்டும் பாதிப்பு ஏற்படாதா?
வணக்கம் பிறமதங்களில் ஒரே கடவுள் வழிபாடு மட்டும் தான் இருக்கும். இந்து மதத்தில் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தேவதைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இது முட்டாள் தனம் கிடையாது. நமது தேவை என்னவோ அதனை பெறுவதற்க்கு சரியான இடத்திற்க்கு சென்று நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என்று வைத்திருக்கிறார்கள். இது ஒரு அற்புதமான விசயம்.
ஒரு கம்பெனியில் பலவேறு தொழில்கள் இருக்கின்றன. நமக்கு தேவையான ஒரு வேலையை அந்த துறையில் மட்டும் கேட்கும்பொழுது மட்டுமே நமக்கு வேலை நடக்கும். சம்பந்தமே இல்லாத துறையில் நீங்கள் சென்று கேட்டால் என்ன நடக்கும்?
வலைதளங்களில் அனைவரும் சொல்லுகின்றனர் என்று சொல்லுகிறீர்கள். சுயஅறிவோடு எழுதும் தளங்களில் இதனை சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அனைத்தும் கடன் வாங்கி செய்யும் செயலில் நம்பகதன்மை என்பது சுத்தமாக இருக்காது.
இன்றைக்கு ஆன்மீகம் எப்படி இருக்கிறது என்று நான் பழைய பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். அதனை மறுபடியும் உங்களிடம் சொல்லுகிறேன். பெண்களால் மோட்சம் அடையமுடியாது என்று சொன்ன புத்தரை விட ஒரு ஞானி இந்த உலகத்தில் இருந்துவிடமுடியாது. அவர் பெண்களுக்கு என்னால் எதுவும் கற்றுதரமுடியாது என்று சொன்னார். ஆனால் நம்ம சாமியார்கள் பெண்களை வைத்து அடிக்கும் கூத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். இந்த மாதிரி ஆட்கள் ஆன்மீகத்தை சொன்னால் அதில் நம்பகதன்மை எப்படி இருக்கும்.
என்னிடம் தொழில் செய்பவர்கள் என் பேச்சை நம்பி செய்வார்கள். உங்களுக்கு பைரவரை பிடித்து இருந்தால் நீங்கள் வழிபட்டுக்கொள்ளுங்கள். சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சொல்லிவிட்டேன். செய்வதும் செய்யாததும் உங்களின் விருப்பம்.
தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தான் நான் கட்டளை இடுவேன். உங்களிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்வதோடு சரி நீங்கள் கடைபிடித்தாலும் சரி கடைபிடிக்காவிட்டாலும் சரி. நான் சொல்லும் ஆன்மீகத்திற்க்கும் இப்பொழுது ஆன்மீகத்தை சொல்லும் ஆன்மீகவாதிக்கும் அதிக வித்தியாசம் இருக்கும்.பிறர் சொல்லும் ஆன்மீகத்தைவிட நான் சொல்லும் ஆன்மீகம் முற்றிலும் வேறுபடும். பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.
நம்பினால் நம்புங்கள்
சாய்பாபா கடைசிவரை அசைவத்தை உண்டு வாழ்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!
படிப்பதற்க்கும் உண்மையில் நடப்பதற்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.படிப்பது போல் நிஜத்தில் கிடையாது.
அசைவம்
நீங்களும் நானும் பலமுறை சென்னையில் உள்ள உணவங்களில் அசைவம் சாப்பிட்டு இருக்கிறோம். இந்த அசைவம் சாப்பிடுகிறவன் தானே உங்களின் ஆத்மாவை உணரவைத்தவன்.
அசைவத்தை விடுங்கள் என்று சொன்ன ஆன்மீகவாதிகள் உங்களுக்கு ஆத்மாவை பற்றி காட்டிக்கொடுத்தார்களா?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment