திருப்பூரில் ஒரு நண்பர் என்னிடம் எப்படி இதனை எல்லாம் நீங்கள் கற்றீர்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இதற்கு பதிலை நான் பலமுறை பதிவில் சொல்லிருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இதில் பார்க்கலாம்.
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே என்று ஒரு பாடல் வரி வரும். இதனை தான் அவருக்கு சொன்னேன். உன்னுடைய உடலும் ஆத்மாவும் உருகினால் கண்டிப்பாக ஆன்மீக தேனை நாம் பருகலாம்.
ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. தன்னுடைய தேவைகளை முடித்துவிட்டு அதன் பிறகு தன்னை உருக்கும்பொழுது மட்டுமே அது நமக்கு வாய்க்ககூடிய ஒன்றாக இருக்கும்.
உண்மையில் மனது அதற்கு தான் நாடுகிறதா அல்லது பணம் பார்க்கலாம் என்று தெய்வீகத்தை நாடுகிறதா என்று அறிந்துக்கொண்ட பிறகு நாம் ஆன்மீகத்தை முடிவு செய்யவேண்டும். மனது அதனை விரும்பாமல் நீங்கள் சென்றால் பிரச்சினையில் தான் முடியும்.
கிரகநிலைகளும் அதற்கு ஒத்துழைக்கின்றதா என்று பார்த்துக்கொண்டு அதன் பிறகு செல்லவேண்டும். மனது கண்டிப்பாக அதனை தான் விரும்புகிறது என்றால் ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment