வணக்கம் நண்பர்களே!
நாம் இப்பொழுது தான் பிறந்தது போல் இருப்போம் ஆனால் நம் முன் மரணம் வந்து நிற்க்கும். மனிதன் மிகவும் வேடிக்கையானவன் பிறர் மரணத்தை எல்லாம் கொண்டாடுவான் ஆனால் தன் மரணத்தைப்பற்றி எண்ணவே மாட்டான்.
முன் எல்லாம் இறப்பு வீட்டிற்க்கு சென்றால் அவர்களின் துக்கத்தில் பங்குக்கொண்டு நமக்கும் இப்படி தான் இறப்பு வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டு வருவான். இப்பொழுது இறப்பிற்க்கு சென்றால் செல்போனோடு குடும்பம் நடத்திக்கொண்டு வருகிறான். மரணம் என்னமோ அடுத்தவனுக்கு தான் நடைபெறும் என்ற நினைப்பில் வாழ ஆரம்பித்துவிடுகிறான். கடைசியில் அவன் முன் மரணம் வந்து நிற்கிறது.
மரணத்தைப்பற்றி கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்தால் பாேதும் நமக்கு இந்த உலகத்தில் நிலையானது என்ன என்று பார்த்து சிந்திக்க தோன்றிவிடும். எந்த ஒரு ஆன்மீகமும் இறப்பை சிந்தித்து வந்தால் கண்டிப்பாக அந்த ஆன்மீகம் நிலையான ஆன்மீகமாக அவனுக்குள் வந்துவிடும்.
எதாவது ஒரு ஆன்மீகவழியை நாம் பின்பற்றி வந்தால் போதும் நமக்கு மரணம் பற்றிய பயம் இல்லாமல் போய்விடும். ஒரு சாதாரண வழிபாடாக இருந்தாலும் போதும் அது உங்களை பன்படுத்திக்கொண்டு ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் காண வைத்துவிடும்.
இப்பொழுது நிறைய பேர் ஜாதககதம்பத்தை படித்துவிட்டு குருவை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். குரு கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வழிப்பாட்டை தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு அது மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுத்துவிடும்.
ஒரு சிலர் ஜாதகத்தை வைத்து குரு எப்படி அமைவார் என்றும் பார்ப்பார்கள். உங்களுக்குள் தேடுதல் வந்துவிட்டால் போதும் குருவை ஜாதகத்தை வைத்து பார்க்கவேண்டியதில்லை இயற்கையாகவே நல்ல குருவாக அமைவார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment