வணக்கம் நண்பர்களே!
இன்று காலை திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு நண்பரோடு சென்று வந்தேன். அந்த கோவிலின் அற்புதம் என்ன என்றால் திருமணம் நடைபெறாதவர்களுக்கு அங்கு சென்று வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
நான் அங்கு சென்றதின் காரணம் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று வருவது உண்டு. அப்படி திடீரென அங்கு பயணம் அமைந்தது. அதோடு அந்த பெருமாளை காண்பதற்க்கு மனிதன் தவம் செய்து இருக்கவேண்டும் என்று சொல்லுவேன்.
தாயாரை தமது இடபக்கத்தில் ஏந்தி வராக மூர்த்தியாக சேவை செய்யும் அழகு என்பது பெருமாளை நித்தமும் தரிசனம் செய்பவர்களுக்கு தான் அதன் பெருமை தெரியும். அதனால் நான் அங்கு சென்று வணங்கிவிட்டு வருவது உண்டு. 108 திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்று.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Naaraayana naaraayana
Post a Comment