Followers

Monday, October 6, 2014

ஆன்மீக சொற்பொழிவு


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு சில இடங்களில் சொற்பொழிவு நடைபெறும். குறிப்பாக எங்களின் ஊரில் சிவன் கோவில்களில் சொற்பொழிவு நடைபெறும். அதில் பங்குபெறுவது அதிகப்பட்சம் நான்கு அல்லது ஐந்து பேர் இருப்பார்கள்.

சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் குறிப்பாக இளைஞர்கள் செல்லமாட்டார்கள். நான் இதனை பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். சொற்பொழிவை பேசுபவர்கள் அதிகமாக புராணங்களில் இருந்து எடுத்து பேசியதால் வந்த வினை இது. நமது இளைஞர்களுக்கு கடவுளைப்பற்றி சொல்லி தருவதற்க்கு இந்த காலத்தோடு ஒப்பிட்டு பேசும்பொழுது மட்டுமே இளைஞர்களுக்கு போய் சேரும்.

சொற்பொழிவு பேசுபவர்கள் நமது தளத்தை பார்க்ககூடும் அதனால் நீங்கள் இந்த கால இளைஞர்களுக்கு புரியும் விதத்தில் சொன்னால் அதிகளவு மக்கள் கோவில்களில் நடைபெறும் சொற்பொழிவுக்கு கூடுவார்கள்.

ஒரு முறை ஒரு சிவன் கோவிலில் சிவனின் திருமணத்தைப்பற்றி ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் சொல்லுகிறார் சிவனின் திருமணம் கைலாயத்தில நடைபெறும்பொழுது பூமி தாங்காமல் தென் திசை மேல்நோக்கி செல்லுகிறது. அதனை சரி செய்ய அகத்தியரை தென்திசை நோக்கி செல்ல சொல்லுகிறார் என்று சொன்னார். 

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை சிவனுக்கே பூமி உருண்டை என்று தெரியாது என்று எனக்கு தோன்றியது. இதனை கேலியாக நான் சொல்லவில்லை பிறர் நம்மை கண்டு கேலி பேசகூடாது என்பதால் உங்களிடம் சொன்னேன். உங்களுக்கு தெரிந்த நல்ல ஆன்மீக தகவலை உங்களின் வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.   சொற்பொழிவு பேசும்பொழுதும் நல்ல தகவல்களை சிந்திக்க கூடிய தகவல்களை சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: