Followers

Friday, December 23, 2016

சுக்கிரனின் பலம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் மரத்தை வைப்பதை விட வெட்டுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். நகர்புறத்தை விட கிராமபுறங்களிலும் இது அதிகம் நடைபெறுகின்றது. மரத்தை வெட்டுவதால் சுக்கிரனின் பலம் குறையும்.

பூக்கள் நிறைந்த மரத்தை வெட்டும்பொழுது சுக்கிரனின் பலம் குறைக்கிறது என்பார்கள். பொதுவாக மரத்தை வெட்டினாலே பலம் குறைய தான் செய்யும். அதோடு நீங்கள் வெளியிடுங்களுக்கு செல்லும்பொழுது அந்த பகுதியில் மரம் அல்லது செடிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடாது.

ஒரு விவசாயி ஒரு மரத்தை வெட்டுகிறான் என்றால் அது சரியான காரணம் இருக்கும். அவன் ஒரு மரத்திற்க்கு பல மரங்களை மற்றும் செடிகளை வைத்துவிடுவதால் அவனுக்கு தீங்கு விளையாது. நம்ம ஆட்கள் மரத்தை வெட்டினால் எதுவும் வைப்பதில்லை.

இன்றைய காலத்தில் ஆன்மீகம் வளர்ந்து இருப்பதால் அவர் அவர்கள் உயிர் வாழ்வனவற்றிக்கு உணவை அளிக்கிறார்கள் ஆனால் ஒரு மரத்தை நாம் வளர்த்தால் இயற்கையோடு சேர்ந்து நிறைய உயிர்கள் அதில் வளரும். சுக்கிரனின் முழுமையான பலனை நாம் பெறலாம்.

இன்றைய காலத்தில் ஒருவர் மோட்சம் அடைய வேண்டும் என்றால் விவசாயியாக இருந்தால் தான் அது நடக்கும். விவசாயி தான் நிறைய உயிர்களை வாழவைக்க உதவுகிறான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா