சனியின் தீயகுணம் எப்படி இருக்கும் என்று ஒரு நண்பர் கேட்டார். கடுமையான ஒரு வறுமையை நீங்கள் சந்தித்தால் அது தான் சனியின் தீயகுணம் என்பதாகும். ஒரு குடும்பத்தில் எந்த நேரமும் அழுகை சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தால் அந்த நிலையில் சனியின் குணத்தை அங்கு காணலாம்.
இறப்பு வீட்டிற்க்கு சென்றால் எப்படி இருக்கும் அது தான் சனியின் குணம். தற்பொழுது எல்லாம் இறப்பு வீட்டில் மிக ஜாலியாக இருக்கின்றார்கள். இளமையில் இறந்தால் எப்படி இருக்கும் அதுபோல தான் சனியின் தீயகுணம் இருக்கும்.
சனியின் தீயகுணத்திற்க்கு இன்னமும் அதிகபடியாக சென்று பார்த்தால் நம்ம ஊர் அரசாங்க மருத்துவமனை சென்று அங்கு பொதுவார்டு சென்று பார்த்தால் அது சனியின் குணமாக நாம் பார்க்கலாம்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவை பார்த்தால் அது சனியின் குணம் என்று சொல்லலாம். இந்தியாவும் அப்படி தான் அவர்களின் கண்களுக்கு தெரியம்.
வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் நபர் வெளியில் தலைகாட்டமுடியாத ஒரு நிலை ஏற்படும். நம்மால் எள்ளவும் வெளியில் தலைகாட்டமுடியாமல் ஒரு நிலையில் இருந்தால் அது சனியின் பிடியில் இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment