வணக்கம்!
நேற்று ஒரு கேள்வி வந்தது. பரிகாரத்தால் அனைத்தையும் சரி செய்துவிடலாமா என்று வந்தது. பரிகாரத்தால் அனைத்தையும் சரிசெய்யமுடியாவிட்டாலும் ஒரளவுக்கு நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடியும். அதன் பிறகு பணம் வந்தவுடன் அனைத்தையும் சரி செய்துக்கொள்ளமுடியும்.
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது ஒன்றை நாம் முயற்சி செய்துக்கொண்டே இருப்பது நல்லது. நம்முடைய முயற்சியை விடாமல் செய்துக்கொண்டே இருக்கும்பொழுது நம்முடைய முயற்சியை எண்ணி கடவுள் நமக்கு ஒன்றை கண்டிப்பாக கொடுப்பார்.
இல்லறத்தில் இருப்பவர்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். சந்நியாசியாக இருப்பவர்கள் கூட சும்மா இருக்காமல் ஏதாவது செய்துக்கொண்டு இருக்கின்றனர். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அனைத்தையும் முயற்சி செய்துக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
நமக்கு தெரிந்த ஒருவரும் வீணாக போய்விடகூடாது என்பதால் தான் நம்மால் முடிந்த விசயத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு பின்பும் நம்முடைய நல்ல விசயம் இருக்கவேண்டும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கிறேன். இதில் பணம் என்பதைவிட நல்ல வாழ்க்கை பிறர்க்கு கிடைக்கும்.
பலனை மட்டும் சொல்லி எதுவும் நடக்கபோவதில்லை. பலனையும் சொல்லி ஒரு வழியை சொல்லிவிட்டால் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும் என்பதால் பரிகாரம் பரிந்துரைக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment