வணக்கம்!
மகாசிவாராத்தரி தினத்தை ஒட்டி குலதெய்வ வழிபாடு நிறைய நடந்து இருக்கும். குலதெய்வ கேள்வியும் கடந்த மூன்று தினங்களாக நண்பர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
குலதெய்வத்தைப்பற்றி கேட்கும்கேள்வியில் முதன்மையானது உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சோதிடர்கள் சொல்லுகின்றனர். இது உண்மையா என்று கேட்டனர். பொதுவாக சோதிடர்கள் சொல்லும் ஒரு பலன் என்ன என்றால் உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லுவது. அடுத்த பலன் உங்களுக்கு ஒரு ஆத்மாவின் சாபம் இருக்கின்றது என்று சொல்லுவது.
குலதெய்வ அருள் இருக்கின்றவர்கள் என்ன ஆடிகாரில் சென்றுக்கொண்டு இருப்பார்களா என்ன ? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா அடித்துவிடுவது தான். குலதெய்வ அருளும் மற்றும் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையும் நன்றாக இருந்தால் தான் நல்லது நடக்கும்.
குலதெய்வ அருள் இருக்கவேண்டும் தான் குலதெய்வ அருள் இருக்கின்றதா என்று சோதிடர்களிடமும் குறிசொல்லுபவர்களிடம் நீங்கள் கேட்டால் உங்களை வைத்து படம் ஓட்டிவிடுவார்கள்.
குலதெய்வத்தை பற்றி கேட்கும் கேள்வி எல்லாம் உங்களின் உறவினர்களிடம் உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தோர்களிடம் கேட்கவேண்டும். அவர்கள் சொல்லிவிடுவார்கள் இந்த சாமியை கும்பிட்டு வந்தோம் அதனை கொஞ்சகாலமாக கும்பிடவில்லை அதனை கும்பிடுங்கள் என்று சொல்லுவார்கள்.
குலதெய்வத்திற்க்கு வருடத்திற்க்கு ஒருமுறை பூஜை செய்யும்பொழுது அதில் பங்குகொள்ளுங்கள். உங்களின் வீட்டில் பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள். ஆத்மாவின் சாபம் எல்லாம் நீங்கள் செய்யும் ஆன்மீகபணியிலும் நீங்கள் செய்யும் தர்மத்திலும் நீங்கிவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment