வணக்கம்!
பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகங்களை ஒவ்வொன்றாக பார்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வருகிறேன். முடிந்தளவுக்கு பிற பிரச்சினையும் சுட்டிக்காட்டி அதற்கும் தீர்வு சொல்லிக்கொண்டு வருகிறேன்.
இதுவரை ஜாதகத்தை பார்க்காத நிறைய பேர்க்கு தற்பொழுது ஜாதகத்தை பார்க்கும் வாய்ப்பாகவும் அமைந்து இருக்கின்றது. இனிமேல் தொடர்ந்து பரிகாரம் செய்யப்படும். பரிகாரம் ஆரம்பித்த நோக்கமே நிறைய பேர்க்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் தான் ஆரம்பித்தேன். அது தற்பொழுது நடைபெற்றுவருகின்றது.
இதுநாள் வரை இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நமது தளத்தை படித்து வருகின்றார்களாக என்பதை எல்லாம் தற்பொழுது தான் பார்த்து இருக்கிறேன். நிறைய புதிய நண்பர்கள் தொடர்புக்கொண்டு வருகின்றனர். அது மகிழ்ச்சியை அளிக்கிறது.
சனி செவ்வாய் பரிகாரம் மட்டும் இல்லாமல் அவர் அவர்களின் ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது என்று சொல்லி பிற வழிபாட்டு முறைகளையும் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் பின்பற்றி வாருங்கள்.
ஒவ்வொரு நபரின் ஜாதகத்தையும் முழுமையாக பார்த்து சொல்லிருக்கிறேன். இன்னமும் நிறைய ஜாதகம் இருக்கின்றது அந்த ஜாதகத்தை எல்லாம் பார்த்து உங்களுக்கு பலனை சொல்லிவிடுகிறேன். நல்ல வாழ்க்கை வாழ ஜாதககதம்பம் உங்களுக்கு துணையாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment