Followers

Friday, February 24, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          இன்று இந்த பதிவை தருவது உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேற்று நட்சதத்திரத்தை பற்றி பார்த்தோம் அதில் நிறைய விசயங்களை நாம் இனிவரும் பதிவில் பார்க்கவேண்டும். நேற்றைய பதிவில் சொன்ன ஒரு விசயத்தை வைத்து இந்த பதிவு இருக்கிறது.

ஒரு மனிதன் பிறப்பு எடுத்தால் அதுவே மிகப்பெரிய வரம் என்று பெரியோர்கள் சொல்ல கேள்விபட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதபிறப்பு எடுத்து அந்த பிறப்பை மிகச்சரியாக பயன்படுத்துபவர்களுக்கு தான் மனிதப்பிறப்பு எடுத்ததின் அர்த்தம் இருக்கும்.

நாம் பிறந்தால் நமக்கு நட்சத்திரம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. நட்சத்திரத்தை வைத்து தான் நாம் அர்ச்சனை எல்லாம் செய்கிறோம். நமது வழிபாட்டிற்க்கு நட்சத்திரம் பயன்படுகிறது என்றால் நாம் உயிராேடு இருப்பதற்க்கு அர்த்தம் கொள்கிறோம்.

உயிர் இறந்துவிட்டால் திதியை பிடித்துக்கொண்டு அந்த திதி வரும்பொழுது அவர்களுக்கு செய்யவேண்டிய சடங்கை செய்கிறோம். ஒரு மனிதன் பிறந்தால் அவனின் பிறந்த நாளை இறந்த பிறகு எல்லாம் கொண்டாடுபவதில்லை. அவன் இறந்த திதியை மட்டும் வைத்து அவர்களுக்கு செய்கிறோம்.

அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்று கேட்கவேண்டாம். அவர்கள் பிறந்த நாள் ஆங்கில நாளில் வருவதை கொண்டாடிகொண்டு இருப்பார்கள். அதனை எவர்கள் ஆத்மார்த்தமாக கொண்டாடுவார்கள். ஏதாவது கிடைக்கும் என்று கொண்டாடலாம்.

ஒருவர் இறந்தபிறகும் அவர்கள் உயிர்தன்மையோடு இந்த பூமியில் இருந்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு அவர்களின் ஜென்மநட்சத்திரம் வரும் நாளில் அவர்களை வழிபாடு செய்வார்கள். இதுவரை இருந்த அனைத்து சித்தர்களுக்கும் அவர்களின் நட்சத்திரம் வரும் நாளில் ஒவ்வொரு வருடமும் விழா எடுப்பார்கள். அவர்கள் இறக்கவில்லை இந்த பூமியில் அவர்கள் இன்னமும் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அமைப்பு கிடைக்கும் என்பது ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது. நம்மிள் பலர் இறந்தால் அவர்கள் இறப்பை நடத்தகூட ஆளில்லை என்பது தான் உண்மையான ஒரு நிகழ்வாக இருக்கின்றது.

நம்முடைய சித்தர்கள் எல்லாம் இந்த பூமியில் உயிரோடு இருந்து நமக்கு உதவுகின்றனர் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். நமக்கு நட்சத்திரம் வேண்டுமா அல்லது திதி வேண்டுமா என்பது நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: