Followers

Saturday, February 25, 2017

நட்சத்திரம்


வணக்கம்!
          சந்திரனை வைத்து நமது பதிவில் நிறைய சொல்லிக்கொண்டு வருகிறேன். இது எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாலும் அதனை எல்லாம் மீண்டும் ஒரு முறை படிக்கும்பொழுது உங்களை நீங்கள் நன்றாக சோதனை செய்து புதுப்பித்துக்கொள்ள உதவும் என்ற நோக்கத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நட்சத்திரத்தை வைத்து உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ளமுடியும் என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. கிரகங்களுக்கு கோவில் இருக்கின்றது. நட்சத்திரத்திற்க்கு எந்த கோவில் இருக்கின்றது என்பது கேட்கலாம். நட்சத்திர கோவில் என்று சொல்லுவது எல்லாம் அந்தளவுக்கு நம்பிக்கை இல்லை என்பது என்னுடைய கருத்து. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதனை வணங்கிக்கொள்ளலாம்.

ஒரு நட்சத்திரத்தின் பலனை அந்த கோவில் அல்லது அந்த தேவதையின் துணைக்கொண்டு பலனை பெறலாம். சித்தர்களின் வழியை பின்பற்றுபவர்கள் அந்தந்த சித்தர்களை வைத்து வழிபட்டு வரும்பொழுது நட்சத்திரன் பலனை பெறமுடியும்.

இன்று திருவோணம் நட்சத்திரம் வருகின்றது. திருவோணம் மகாவிஷ்ணு அதிதேவதையாக இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட இன்று உகந்தது. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு குணத்தை கொடுக்ககூடிய பண்பு உண்டு. உங்களுக்கு எது தேவையோ அந்த நட்சத்திரத்தின் தேவதையை கொண்டு பயன்பெறமுடியும்.

ஒரே நேரத்தில் எல்லாம் நடைபெற்றுவிடாது. ஒரு சில நேரத்தில் நமக்கு நடக்கும். அந்த நேரத்தை எல்லாம் நாம் கணக்கில் கொண்டு செயல்பட்டு வந்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: