Followers

Monday, February 20, 2017

சந்திரன்


ணக்கம்!
          முதலில் ஒரு ஜாதகத்தை எடுத்தால் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது லக்கினாதிபதி என்பதை விட உங்களின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். சந்திரன் வளர்பிறையா அல்லது தேய்பிறையா என்பதை பார்த்து முடிவு செய்யவேண்டும். அதோடு சந்திரன் எந்த நட்சத்திரத்தில் மற்றும் யாரோடு இணைந்து இருக்கிறது என்பதையும் பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

சந்திரனின் நிலை சரியில்லை என்றால் உங்களின் வாழ்க்கை நன்றாக அமையாது. சந்திரன் சரியில்லை என்றால் நிறைய போராட்டங்களை நீங்கள் பார்த்து விட்டு அதன் பிறகு தான் நீங்கள் வெற்றி பெறமுடியும். 

சந்திரனுக்கு மறைவிடத்தில் தீயகிரகங்கள் அல்லது குரு கிரகம் அமைந்தாலும் போராட்டங்கள் அதிகமாக இருக்கும். நிறைய பேர்களிடம் அவமானப்பட்டு வாழ்க்கையை கடத்த வேண்டி ஒரு சூழ்நிலை உருவாகும்.

ஜாதகத்தில் எதனை சரி செய்தாலும் முதலில் சந்திரனை சரி செய்துவிட்டால் போதும். அதாவது சந்திரன் நமக்கு நன்மையை கொடுப்பது போல இருந்தால் நல்லது. வாழ்க்கை நன்றாக செல்லும்.

சந்திரன் சரியில்லை என்றால் அதனை சரி செய்வதற்க்கு முதலில் எளிமையான பரிகாரம் பெளர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் கிரிவலம் செல்வது மட்டுமே. குறைந்தது ஒரு வருடமாவது நீங்கள் கிரிவலம் செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: