வணக்கம்!
ஒவ்வொரு மனிதனின் தோல்வியும் அவன் மனம் சார்ந்த ஒன்றாகவே இருக்கின்றது. சந்திரன் பலமாக இருந்தால் அவன் மனமும் நன்றாக இருந்து அவன் எதிலும் வெற்றி பெற்றவனாக இருக்கமுடியும். சந்திரன் சரியில்லை என்றால் அனைத்திலும் தோல்வியை தான் ஒரு மனிதன் சந்திக்கமுடியும்.
ஒரு சிலர் முன்னேற்றம் என்பதை அடையாமல் போவதற்க்கு காரணம் அவர்கள் தொடர் தோல்வியை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தொடர் தோல்வியை அடைந்த ஒருவரின் மனம் சோர்ந்தவுடன் அவரின் உடலும் சோர்ந்துவிடும். சக்தி அற்ற ஒருவராக மாறிவிடுவார்.
பொதுவாக நான் உணவு கட்டுபாடுகளை அடுத்தவர்களிடம் பரிந்துரை செய்வதில்லை. உணவை குறைக்கவேண்டும் என்றால் அந்த நபர் ஆத்மசாதனை செய்பவர்களாக இருந்தால் குறைக்கலாம். ஆத்மசாதனை செய்யாதவர்கள் உணவை குறைத்தால் அவர்களுக்கு இயற்கையாகவே சக்தி குறைந்துவிடும் என்பதால் இதில் தலையிடுவதில்லை.
உணவை குறைக்க ஆரம்பித்துவிட்டால் உடல் சோர்வால் உங்களால் நன்றாக சிந்திக்ககூட முடியாமல் போய்விடும். ஒருத்தர் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் இந்த விசயத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.
உடல் சோர்வை தந்தால் மனச்சாேர்வும் வந்துவிடும் அப்புறம் எதில் முன்னேற்றம் காண்பது. சந்திரன் ஒருத்தருக்கு சரியில்லை என்றால் அவர் உணவு விசயத்தில் கவனம் செலுத்தும்பொழுது உடல் சோர்வு அடையாமல் இருந்து மனதை சரி செய்ய உதவும். உடல் தெம்பாக இருந்தால் மனசும் தெம்பாக இருக்கும் என்பது எனது சின்ன நம்பிக்கை இந்த பதிவு உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment