Followers

Thursday, February 23, 2017

சந்திரன் என்ற காதலன்


ணக்கம்!
          நமது முன்னோர்கள் நமக்கு கதையாகவே அனைத்தையும் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அந்த கதையை வைத்து நாம் எளிதில் புரிந்துக்கொள்ளமுடியும். நமது சோதிடசாஸ்திரத்திற்க்கு மிக மிக முக்கியமாக இருப்பது சந்திரன் தான். சந்திரனை வைத்து தான் அனைத்துமே.

ஒரு உயிர் இந்த பூமியில் எடுக்கிறது என்றால் அந்த உயிர் ஜனனம் ஆகும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ அது தான் ஜென்மநட்சத்திரம் என்று சொல்லுவார்கள். நமது நல்லது அனைத்திற்க்கும் ஜென்மநட்சத்திரத்தை வைத்து தான் செய்யமுடியும்.

உயிர் போய்விட்டால் நட்சத்திரத்தை விட்டுவிட்டு திதிக்கு சென்றுவிடுவார்கள். உயிரோடு இருப்பதற்க்கு நட்சத்திரம் மிக மிக அவசியமாக இருக்கின்றது.

நட்சத்திரத்தை எல்லாம் பெண்ணாகவே கருதி வந்தனர். சந்திரனுக்கு 27 நட்சத்திரத்தையும் மணமுடித்து வைத்தனர் என்று நீங்கள் கதையில் படித்து வந்து இருக்கலாம். தட்சன் என்பவரின் மகள்கள் தான் இந்த 27 ஏழு பேரும் அதில் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் அதிக பாசமும் காதலும் கொண்டார் என்றும் பிற நட்சத்திரங்கள் தன் தந்தையிடம் முறையிட்டு தட்சன் சொல்லியும் கேட்காமல் சந்திரனுக்கு சாபம் ஏற்பட்டு அதனை போக்க சிவனிடம் சென்றதாக விரியம் இந்த கதை.

இதனை எல்லாம் நான் ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் சந்திரனை பிடித்தால் உங்களுக்கு அனைத்தையும் நடக்கும் என்பதற்க்காக சொன்னேன். சந்திரனை வைத்து நிறைய விசயங்களை செய்யமுடியும்.

ராேகிணி நட்சத்திரம் வருகின்ற நாளில் கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அதனை நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கு புரியும். அதோடு ரோகிணி நட்சத்திரம் வரும் அன்று பெளர்ணமி வந்தால் அதன் ஈர்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: