வணக்கம்!
பொதுவாக நமது பரிகாரம் சொன்னவுடன் நடந்துவிடும். நமக்கு தேவையான ஜாதகங்கள் வந்தவுடன் அதனை இறுதி செய்து உடனே நடத்திவிடுவேன். சனி மற்றும் செவ்வாய் பரிகாரம் மட்டும் கொஞ்ச நாளைக்கு இழுத்துக்கொண்டு செல்கிறது.
சனி மற்றும் செவ்வாய் பரிகாரம் ஆரம்பித்தவுடன் நிறைய கஷ்டம் எனக்கும் வந்தது அதனை எல்லாம் ஒரு வழியாக எதிர்நோக்கிக்கொண்டு இருந்தேன். அது எல்லாம் நம்மால் எளிதாக சமாளிக்கமுடியும் என்றாலும் அதனோடு போராடுவதில் நிறைய அனுபவமும் கிடைக்கும் என்பதால் சும்மா அதனை எதிர்நோக்கினேன்.
தற்சமயம் அனைத்து பிரச்சினையும் அதுவாகவே குறைந்துக்கொண்டு வருகின்றது. ஒரளவுக்கு நிம்மதி வந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். நம் நண்பர்கள் நிறைய ஜாதகங்களை எனக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் பங்குகொள்ளவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது.
இன்று வரை பல ஜாதகங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றது. முடிந்தளவுக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள். கொஞ்சநாள் தள்ளி வைக்கிறேன் ஆனால் விரைவில் இறுதி செய்யப்படும்.
ஜாதகம் அனுப்பிய நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் இன்றுமுதல் அழைப்பு கொடுக்கிறேன். அனைவருக்கும் வருகின்றதா என்பதை பாருங்கள். இரண்டு நாட்களில் அந்த வேலை முடிவடைந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment