Followers

Saturday, February 18, 2017

உங்களால் முடிந்த ஒன்று



வணக்கம்!
          பல குடும்பங்களை நான் நேரில் சென்று ஜாதகத்தை பார்த்து அவர்களின் வாழ்க்கையை நான் கண்டவன். என்னுடைய அனுபவத்தை வைத்து ஜாதககதம்பத்தில் எழுதுவதால் தான் அது பலரை சென்றடைகிறது அனைவருக்கும் பிடிக்கிறது என்று சொல்லலாம். 

இன்று நாகரீக உலகம் என்று ஒரு சில நல்ல விசயத்தை எல்லாம் விட்டுவிட்டு வந்துவிடுகிறோம். அண்ணன் தம்பியாக பிறந்தாலும் ஒரு சில காலங்களில் அ்வர் அவர்கள் தங்களை பார்த்துக்கொள்வது கூட இல்லாமல் தனியாக சென்று தன் மனைவியோடு வாழ தொடங்கிவிடுகிறார்கள். 

எவன் எப்படி போனால் நமக்கு என்று என்று இருந்துவிடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் நாசமாக போனாலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை பாதிக்க செய்யும் என்பது காலம் சென்ற பிறகு தான் தெரியும்.

உங்களின் குடும்பத்தில் அண்ணன் தம்பியாக இருவருர் பிறந்தால் அதில் ஒருவராக நீங்கள் இருந்து ஒருத்தரைப்பற்றி அக்கறைக்கொள்ளாமல் இருந்தால் ஒரு காலத்தில் அதற்க்காக நீங்கள் வருத்தப்படவேண்டியிருக்கும்.

உங்களின் குடும்பத்தில் ஒருத்தர் நன்றாக வாழவில்லை என்றாலும் அந்த நபரால் உங்களின் அல்லது உங்களின் வாரிசுகளில் வாழ்வில் ஒரு பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்லுகிறேன்.

அடுத்ததாக ஒன்றை சொல்லுகிறேன். உங்களின் தந்தை நன்றாக வாழாமல் இருந்து நீங்கள் பிறந்தால் உங்களின் குடும்பத்தை நீங்கள் உயர்த்த நீங்கள் பெரிய கஷ்டப்படவேண்டியிருக்கும். உங்களின் அப்பா ஒழுங்காக வாழவில்லை என்றால் உங்களின் அப்பாவிற்க்காகவும் உழைக்கவேண்டும். உங்களுக்காகவும் உழைக்கவேண்டியிருக்கும். உங்களின் வாரிசுகளுக்கும் உழைக்கவேண்டியிருக்கும். எவ்வளவு பெரிய சுமை அது என்பது கஷ்டபடுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

இன்றைக்கு என்னை நாடிவருபவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் நல்லது செய்து அவர்களை வாழவைக்கவேண்டும் என்று தான் நிறைய போராடி செய்துக்கொண்டிருக்கிறேன். அது லாபநோக்கம் என்பதைவிட அடுத்தவர் மேல் உள்ள அக்கறை மட்டுமே.

நீங்கள் வெளியாட்களுக்கு செய்வதை விட உங்களின் குடும்பத்தில் உள்ளவருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கலாம். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். லாபநோக்கம் அன்றி செய்தால் ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களால் முடிந்த உதவியை உங்களின் குடும்பத்திற்க்கு செய்யுங்கள். பணம் தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை உங்களின் அறிவை கூட கொடுத்து அவர்களை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லமுடியும். கொஞ்சம் யோசித்து பார்த்து செயல்படுங்கள் நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் அப்படி இல்லை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இந்த பதிவு என்ன என்று கேளுங்கள். உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: