வணக்கம்!
ஒரு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு செவ்வாய் கிரகம் உங்களின் ஜாதகத்தில் வலுவாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் அதிகாரம் உங்களுக்கு கிடைக்காது.
நமக்கு செவ்வாய் சரியில்லை என்றால் நாம் அதிகாரம் செலுத்தமுடியாது. ஏதோ ஒரு விசயத்திற்க்கு நாம் அதிகாரம் செலுத்தவேண்டும் என்ற நிலை வரும்பொழுது சந்திரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்பொழுது நாம் அதிகாரம் செலுத்தலாம்.
கீழே உள்ள நட்சத்திரம் செவ்வாயின் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் சந்திரன் செல்லும்பொழுது நீங்கள் அந்த காரியத்தை செய்யலாம்.
மிருகசீரிஷம் - செவ்வாய்
சித்திரை - செவ்வாய்
அவிட்டம் - செவ்வாய்
ஒரு மாதத்தில் அவிட்டம் நட்சத்திரம் வரும்பொழுது நீங்கள் ஏதோ ஒரு பதவிக்கு ஆசைப்பட்டு சம்பந்தப்பட்டவரை சந்தித்தால் அந்த நாளில் உங்களுக்கு அந்த பதவி வந்துவிடும். சாத்தியப்படகூடிய விசயமாக அது இருந்தால் கண்டிப்பாக இது நடைபெற்றுவிடும்.
நமக்கு இல்லாத ஒன்றை பெறுவதற்க்கு இப்படிப்பட்ட விசயத்தை நாம் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். காலத்தை சார்ந்து செயலை செய்பவர்களுக்கு இது உகந்ததது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no 9551155800
No comments:
Post a Comment