Followers

Friday, February 17, 2017

பரிகார விளக்கம்


வணக்கம்!
          பரிகாரம் செய்யும்பொழுது பல விசயங்கள் எனக்கு தென்பட்டன. அதாவது நம்முடைய பரிகாரத்தில் முதன்மை வகிக்கிப்பது நமது அம்மன் தான். எதனை செய்தாலும் அம்மன்  வழியாக தான் செய்யமுடியும். அம்மனை கொண்டு செய்யும்பொழுது அம்மன் தன்னை காட்டிக்கொடுக்கும். ஹோமத்தில் தெரியும் அம்மனை தான் படம் பிடித்து நமது பரிகாரத்தில் பங்குக்கொண்டவர்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

பரிகாரத்திற்க்கு இலவசமாக கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் ஏதோ சும்மா கலந்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். வாட்ஸ்அப் எண்ணை கொடுத்தாலும் அவர்களுக்கு நான் வாட்ஸ்அப்பில் கூப்பிடும்பொழுது எந்தவித ரெஸ்பான்ஸ்ம் இல்லை. நமது வேலை பரிகாரத்தை செய்யவேண்டும் என்று செய்துவிட்டேன்.

பரிகாரத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எந்தவித லாபத்தையும் எதிர்நோக்காமல் செய்து இருக்கிறார் என்று புரியும். உங்களின் அனைவருக்கும் சொல்லுவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ என்னால் முடிந்த ஒரு உதவியை செய்கிறேன். 

நீங்கள் பங்குக்கொள்ளும்பொழுது துடிப்போடு செயல்படுங்கள் என்று தான் கேட்கிறேன். உங்களின் தகவல்கள் சரியாக வரவேண்டும் அதோடு நம்மோடு வாட்ஸ்அப்பில் இணையும்பொழுது அது உங்களுக்கு ஒரு நல்ல உணர்வை கொடுக்கும்.

இனிமேல் வரக்ககூடிய பரிகாரத்திற்க்கும் அனைவரும் பங்குக்கொள்ளவேண்டும். நல்ல முறையில் உங்களை தயார் செய்துக்கொண்டு அதில் பங்குக்கொள்ளுங்கள். சும்மா பங்குக்கொள்ளலாம் என்று வரவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: