Followers

Monday, February 6, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          நான் ஒரு இடத்தில் வேலை பார்த்தப்பொழுது அந்த அறை சிறிய அறை. அந்த சிறிய அறையில் ஒரு படம் எனக்கு கிடைத்தது. அந்த படத்தை  அந்த அலுவலகத்திலேயே வைத்து தினமும் வணங்கிவருவேன். அந்த படத்தை வைத்தது ஒரு எலெட்ரிக் ஒயர் வரும் இடத்தில் வைத்து வணங்கி வந்தேன். 

தினமும் அலுவலகத்தை திறப்பது நான் தான். நான் உட்கார்ந்திருக்கும் சேர்க்கு முன்னால் சுவற்றில் ஒரு ஒயர்க்கு மேலே அதனை நான் மாட்டி வைத்தேன். அதனை அவ்வப்பொழுது பார்த்து வருவது உண்டு.  அவரைப்பற்றி அந்த நேரத்தில் எனக்கு தெரியாது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் இவர் யார் என்று கேட்பது உண்டு. அளவில் சிறிய படம் என்றாலும் அந்த இடத்தில் இருந்தே ஒரே படம் அது மட்டுமே.

சிறிய அளவில் இருந்த படம் பெரியளவில் ஈர்த்தது. அவரைப்பற்றி பல பேர் பல விசயங்களை எனக்கு சொன்னார்கள். அதில் இருந்து எனக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 

அது கோர்க்கர் சித்தரின் சிறிய படம். கோர்க்கர் சித்தர் என்று அவரின் படத்திற்க்கு கீழ் எழுதியிருக்கும். எப்படி என்றால் கோரக்கர் வடக்கு பொய்கைநல்லூர் என்று எழுதியிருந்தது. நான் இருக்கும் ஊரில் இருந்து அதாவது பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டிணத்திற்க்கு ஒரே பேருந்து பயணத்தில் சென்றுவிடலாம். பல தடவை நான் நாகப்பட்டிணத்திற்க்கு சென்று இருக்கிறேன். இவரின் ஜீவசமாதிக்கு சென்றதில்லை. 

எனக்கு பல வழிகளிலும் உதவிய சித்தர் ஒருவரின் ஜூவசமாதிக்கு என்னை அழைக்காமல் வைத்திருக்கிறாரே என்று நினைப்பது உண்டு. அதே நேரத்தில் அவர் அப்படி என்னை வைத்திருப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இருக்கும் என்று இருக்கிறேன். பல வழிகளில் பல நேரங்களில் பல இடத்தில் அவரின் புகைப்படம் அல்லது அவரைப்பற்றி ஏதோ ஒரு தகவல் எனக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

ஜாதககதம்பம் படிக்கும் என்னோடு நெருங்கி பழகும் பல நண்பர்களிடம் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன். பொதுவாக இதனை சொல்லுவதற்க்கு காரணமும் இன்று கண்ணில் பட்டது உடனே எழுதிவிட்டேன். அவ்வப்பொழுது அவரின் நல்ல விசங்களைப்பற்றி உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: