வணக்கம்!
நிறைய குடும்பங்களை பார்த்து இருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்து மேலே வந்து இருக்கின்றனர். அவர்கள் ஒரு காலத்திற்க்கு பிறகு அவர்களின் குடும்பங்களில் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அனைத்தையும் இழந்து இருக்கின்றனர்.
அதிகப்பட்சமாக உள்ள நபர்களுக்கு கொடுமையான கிரகங்களின் தசா நடந்தால் இப்படி குடும்பத்தை சீரழித்துவிடும். தீயகிரகங்கள் கொடுமையான பலன் என்றால் அனைவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கின்றதை அனைத்தயும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுவதுதான் கொடுமையான பலன்.
இன்றைக்கு ஒரு குடும்பம் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றால் அந்த குடும்பத்தில் உள்ள ஒருவராவது ஆன்மீகத்தில் இணைந்துக்கொள்வது நல்லது. ஆன்மீகத்திற்க்காக நிறைய செய்வது . என்னால் ஆன்மீகத்தை நோக்கி செல்லமுடியவில்லை என்றால் ஆன்மீகத்திற்க்காக பணத்தை செலவு செய்வது இதனை எல்லாம் செய்யவேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒருவர் கண்காணிப்பதும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒருவர் தவறு செய்தாலும் அந்த குடும்பத்தை பாழ்செய்யும் அளவுக்கு விளைவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட தசா நடக்கிறது என்பதையும் கண்காணித்து வரவேண்டும். அதற்கு தீர்வு என்ன என்பதையும் யோசிக்கவேண்டும்.
மிக உயர்ந்த இடத்தில் இருந்தாலும் இந்த எச்சரிக்கை உணர்வோடு நீங்கள் செயல்பட்டால் எப்படிப்பட்ட தசாவிலும் உங்களின் குடும்பத்தை காப்பாற்றக்கொள்ளலாம்.
நான் தினமும் பார்க்கும் பல ஜாதகங்களில் தீயகிரகங்களின் தசா நடக்கும் குடும்பத்தில் பல சிக்கல்களை உருவாகி சந்தித்து வருகின்றனர். அதனை சரிசெய்வதற்க்கும் அவர்களின் மனநிலை இடம் தருவதில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விசயம்.
நல்ல வாழ்கிறவன் தான் உஷாராக இருக்கவேண்டும். கெட்டவனுக்கு அடிமேல் அடி விழும்பொழுது ஏற்கனவே நாம் அதில் தான் இருக்கின்றோம் என்று இருப்பான். புதிய அடி வாங்கிறவன் தான் அஸ்திவாரமே ஆட்டம் காணஆரம்பித்துவிடும்.
அம்மன் அருளால் நீங்கள் நன்றாக வாழுங்கள். அதே நேரத்தில் மேலே சொன்ன எச்சரிக்கை உணர்வோடு இருக்கும்பொழுது அனைத்தையும் சமாளிக்கலாம். நீங்கள் செய்கின்ற தர்மமும் தலைகாக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment