Followers

Saturday, February 4, 2017

சனி செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களுக்கு பதிவை அளிக்கிறேன். சொந்த வேலை தனி ஒருவனாக இதனை செய்யவேண்டிய காரணத்தால் பதிவை கொடுக்கமுடியவில்லை. இனிமேல் தொடர்ந்து உங்களுக்கு தந்துவிடுகிறேன். அம்மன் அருளால் அது நடைபெறும்.

சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு இறுதி நாள் அடுத்த வாரமாக இருக்கும். இதுவரை அனுப்பிய ஜாதகத்தை எல்லாம் பார்த்து இன்று முதல் உங்களுக்கு பதிலை அனுப்புகிறேன்.

சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பாதவர்கள் அனுப்பி வைக்கவும். சனி செவ்வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் கொஞ்சம் தனிப்பட்ட முறையிலும் பிரச்சினை எனக்கு வந்தது அதனை எல்லாம் நமது அம்மன் அருளால் முடித்து வைக்கமுடிந்தது.

சனி செவ்வாய் இரண்டு கிரகங்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை அளிக்ககூடிய ஒரு கிரகங்கள் தான். சோதிடம் அதிகம் படிப்பவர்களுக்கு அதன் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து அதற்க்கு செய்யவேண்டியதை செய்துவிடுவார்கள்.

வருடம் ஒரு முறை இந்த இரண்டு கிரகங்களுக்கு செய்துவிட்டால் அதன் பாதிப்பை நாம் கொஞ்சம் குறைத்துவிடலாம். பரிகாரத்திற்க்கு அதிக பணத்தை செலவு செய்யவேண்டியதில்லை. குறைந்த விலை அல்லது இலவசமாக கூட நீங்கள் இதனை செய்துக்கொண்டு நல்ல வாழ்க்கை வாழ ஜாதககதம்பம் உங்களுக்கு உதவும்.

அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் உடனே அனுப்பி வைக்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: