Followers

Friday, February 17, 2017

சுக்கிரன்



ணக்கம்!
          ஒருவருக்கு திருமணம் நடைபெறவேண்டும் என்றால் அவருக்கு குரு கிரகத்தின் பலன் வேண்டும். குரு கிரகத்தின் பலன் வரும்பொழுது ஒருவருக்கு திருமண ஏற்பாடு நடைபெறும்.

குரு கிரகம் திருமண ஏற்பாட்டை செய்கிறது என்றால் திருமண வாழ்க்கைக்கு எந்த கிரகம் நல்லது செய்யவேண்டும் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லாமல் செல்வதற்க்கு சுக்கிரன் கிரகத்தின் தயவு வேண்டும்.

சுக்கிரன் கிரகம் மறைவு ஸ்தானம் அல்லது ஏதாவது ஒரு தீயகிரகத்தோடு இல்லாமல் இருந்தால் திருமணவாழ்வு நன்றாக இருக்கும். சுக்கிரன் தீயகிரகத்திற்குள் சென்று மாட்டிக்கொண்டால் திருமண வாழ்வு பிரச்சினையை சந்தித்துவிடுகிறது.

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி சுக்கிரனின் தயவு நிறைய தேவைப்படும். சுக்கிரனின் தயவு இருந்தால் பிரச்சினை இல்லை. நிறைய திருமணங்கள் விவாகாரத்து வரை செல்வதற்க்கு காரணம் சுக்கிரன் கிரகம் பாதிப்படைவது தான். 

சுக்கிரன் கிரகம் பாதிப்படைந்தால் அதற்கு என்ற நிறைய பரிகாரங்களை சோதிடர்கள் செய்வார்கள். அதனை செய்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சுக்கிரனின் காரத்துவம் உடையதை பலப்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: