வணக்கம்!
பரிகாரம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பரிகாரம் நல்ல படியாக தான் செய்துக்கொண்டு இருக்கின்றேன். பரிகாரம் நாள் இறுதி நாள் முடிந்தும் நிறைய ஜாதகங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. இதனை எல்லாம் தற்பொழுது செய்யமுடியாது என்பதால் அடுத்தமுறை செய்யும்பொழுது கலந்துக்கொள்ளலாம்.
இலவசமாக பரிகாரத்தில் கலந்துக்கொள்ளும் நபர்களுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலில் தைபூசத்திற்க்கு ஏதாவது முடிந்த உதவியை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். நிறைய நண்பர்கள் அதனை செய்யவில்லை என்பது பரிகாரம் செய்யும்பொழுது தெரிகிறது.
இலவசமாக இருந்தாலும் ஏதோ ஒரு நல்ல விசயத்தை நீங்கள் செய்துவிடவேண்டும். பரிகாரம் நல்ல பலனை தருவதற்க்கு நீங்கள் இப்படிப்பட்ட நல்ல காரியத்தை செய்யும்பொழுது தான் அது பலனை கொடுக்கும்.
நான் செய்யும் நிறைய பூஜைகள் எல்லாம் சிறந்த முறையில் பலன் கொடுப்பதற்க்கு காரணம் அந்தளவுக்கு சேவை செய்துவிட்டு பூஜையை செய்வது உண்டு. அப்பொழுது நல்ல பலனை கொடுக்கிறது.
நீங்களே இப்படிப்பட்ட விசயத்தில் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிறைய நன்மையை நீங்கள் பெற்றுக்கொண்டு அதன் பிறகு நிறைய முன்னேற்ற ஏற்பாட்டை செய்வீர்கள் என்ற நோக்கத்தில் நீங்களே கோவிலுக்கு செய்துவிடுங்கள் என்று சொன்னேன். இன்னமும் தொடர்ந்து பரிகாரம் இருக்கின்றது அதனால் உடனே ஏதோ ஒரு நல்ல விசயத்தை செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
arumai. vaalthukal.
Post a Comment