Followers

Wednesday, January 2, 2013

ஆன்மீக அனுபவங்கள் 45



மேலே உள்ள படம் எனது மதிப்பிற்குரிய தியாகலிங்க ஐயா அனுப்பியது.

ணக்கம் ண்பர்களே !

இன்று காலை திருச்சியிருந்து நண்பர் கார்த்திக் என்னை தொடர்பு கொண்டு பேசினார். பேசும்போது அவர் சொன்னார். மந்திரஅனுபங்களை கொடுப்பதற்க்கு ஏன் இவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என்று கேட்டார். அவரின் விருப்பத்திற்க்காக ஒரு பதிவு.

மந்திரஅனுபவங்களை பெற்றவர்கள் அந்த காலத்தில் நிறைய பேர் இருந்தார்கள் ஆனால் அவர்கள் இதனை அடுத்தவர்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு செல்லவில்லை. ஏன் என்றால் சரியான சிஷ்யர்கள் கிடைக்கவில்லை. இது அனைத்தும் அவர் அவர்களின் குலசொத்து மாதிரி தான் இருந்துவந்தது இதனை ஏற்று நடத்துவதற்க்கு அவர்களின் வாரிசுகள் விரும்பவில்லை அது காலமாற்றத்தால் கூட இருக்கலாம்.

மந்திரங்கள் என்றால் அனைவரும் பயந்ததும் ஒரு காரணமாக கூட இருக்கலாம். ஏதோ மாந்தீரீகமாக இருக்குமோ என்று நினைத்துவிட்டார்கள். மாந்தீரீகம் என்பது தனிவழி. மந்திரங்கள் என்பது தனி வழி என்பது புரியாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. 

இதை முழுமையாக கற்றவர்கள் இதனை தகுந்த சிஷ்யர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்து காலம்தாழ்த்தி அவர்களுக்கு வயதானவுடன் இதனை மறந்தே போய்விட்டார்கள் என்றும் கூட சொல்லலாம். அவர்கள் இறக்கும்போது இதனை கோவிலில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அந்த மாதிரி ஒப்படைத்துவிட்டு சென்ற கோவில் இன்றும் நிறைய உள்ளது. 

என்னை எடுத்துக்கொள்ளுங்கள் இதனை என் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டும். என் குடும்பத்தில் உள்ளவர்கள் இதற்கு தகுதியானவராக இன்றும் வரவில்லை அதனால் இதனை யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்று தேடினால் ஒருவரும் சரியான ஆளாக இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது.

என்னுடைய குலசொத்தை எடுத்து உங்களுக்கு நான் கொடுக்கிறேன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்னை ஆயிரம் கேள்வி கேட்கிறீர்கள் என்ன செய்வது காலம் கலிகாலம் அல்லவா நீங்கள் பேசாவிட்டாலும் உங்களை கலி பேசவைக்கும்.

இப்பொழுது இரண்டு பேர்கள் மட்டும் தேர்வு செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த இரண்டு பேரும் வேறு ஆட்கள் வழியாக பெறபெற்று கொடுத்தது. அவர்களுக்கு வழிகாட்டல் மட்டும் என்னுடையது.

இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கவேண்டிய விருப்பத்தில் தான் உங்களுக்கு அறிவிப்பு தெரிவித்து அனைவரையும் சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். பொறுமையாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: