Followers

Thursday, January 10, 2013

ஐந்தாவது வீட்டு தசா முன்னோட்டம்



வணக்கம் நண்பர்களே !
                     பூர்வ புண்ணியம் பற்றி பார்த்து வந்தோம் அந்த தொடர் தொடர்ச்சியாக வந்துக்கொண்டே இருக்கும். சோதிடத்தைப்பற்றி மேலும் நாம் தெரிந்துக்கொள்ள ஐந்தாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து தசா நடைபெறும் போது என்ன மாதிரி பலன்களை தரும் என்பதை தொடர்ச்சியாக நாம் பார்ப்போம்.

ஆன்மீக அனுபவங்கள் தொடர் தொடர்ச்சியாக வந்துக்கொண்டு இருப்பதால் சோதிட தொடர் குறைவாக இருக்கிறது.ஆன்மீக அனுபவங்கள் தொடரில் நல்ல வரவேற்பை பெற்றாலும் நமது தளத்தின் தலைப்பே  ஜாதக கதம்பம் தான் அதனால் சோதிடபாடங்கள் அதிகமாக கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் சோதிடமும் இனிமேல் அதிக அளவில் எழுதுகிறேன். 

ஐந்தாம் பாவம் புதிய கண்டுபிடிப்புகளை காட்டும் இடமும் என்பதால் ஒருவர் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தால் அவர் பூர்வபுண்ணியத்தால் தான் அவர் கண்டுபிடித்து இருப்பார்.நுட்பமான அறிவால் தான் புதிய கண்டுபிடிப்புகளை ஒருவரால் கண்டுபிடிக்க முடியும் என்பதால் ஐந்தாம் வீடு நுட்பமான அறிவை காட்டும் இடமும் கூட தான்.

வரும் பதிவுகளில் ஐந்தாம் வீட்டு தசாவைப்பற்றி சோதிடபாடங்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



No comments: