Followers

Monday, January 21, 2013

மிதுனம்: ஐந்தாவது வீட்டு தசா பலன்



ணக்கம் ண்பர்களே!
                          மிதுன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்

மிதுன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கு நட்பு வீடு அவர் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால்

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த துறையில் நுழைந்தாலும் அந்த துறையில் வெற்றி வாகை சூடுவார். விளையாட்டுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவார். உடல் நிலை நன்றாக இருக்கும்

ஐந்தாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு இரண்டாவது வீடு கடகம் அதன் அதிபதி சந்திரன, சுக்கிரனுக்கு இந்த வீடு பகை

தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திடீர் பணவரவுகள் உண்டு. குழந்தைகள் இருக்கும். குழந்தைகளால் இவருக்கு வருமானம் கிடைக்கும். இதில் சம்பந்தப்பட்டு தசா நடைபெறுவது நல்லது

ஐந்தாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு மூன்றாவது வீடு சிம்மம் அதன் அதிபதி சூரியன் சுக்கிரனுக்கு இந்த வீடு பகை

கமிஷன் தொழில் லாபம் தரும். காதுகளில் பிரச்சினை உருவாகும். திடீர் பயணங்கள் செல்வார்கள். புத்திரதோஷத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டவாய்ப்புகள் குறைவாக இருக்கும்

ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு நான்காவது வீடு கன்னி அதன் அதிபதி புதன். சுக்கிரனுக்கு இந்த வீடு நீசம்

புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் விரையம் ஆவார்கள். வாகன வசதி ஏற்படும். டிராவல்ஸ் தொழில் செய்யலாம். வீடு அமையும். தாயார் நல்ல நிலையில் இருப்பார். நல்ல சுகவசதிகளை அனுபவிக்கலாம்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு ஐந்தாவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் ஆட்சி வீடு.

நுண்ணறிவு திறன் இருக்கும். எந்த செயலிலும் இறங்கி வெற்றி பெற்றுவிடுவார். அனைத்தும் வாழ்க்கையில் எளிதில் கிடைத்துவிடும். விளையாட்டு துறையில் வெற்றி உண்டு சூதாட்டத்திலும் பங்கு கொண்டு நல்ல லாபத்தை பார்ப்பார்கள்

ஐந்தாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு ஆறாவது வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய், சுக்கிரனுக்கு இந்த வீடு சமம்

நல்ல பணவரவு இருக்கும். பங்குவர்த்தகம் கை கொடுக்கும். நல்ல துணிச்சலுடன் செயல்படுவார். அனைத்து துறையிலும் கால்பதிப்பார்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு

மனைவியால் யோகம் இருக்கும். அவர் மூலம் பணவரவு இருக்கும். தொழிலில் கொடிகட்டி பறப்பார். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

ஐந்தாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திறக்கு எட்டாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு

உடல்நிலை கவலை தரும் மனதில் சோர்வு ஏற்படும். துணைவரால் பிரச்சினை சந்திக்க வேண்டிவரும். காதல் தோல்வியை தரும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு

பெரியோர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளின் ஆசி கிடைக்கும். ஊரில் நல்ல மரியாதை கிடைக்கும் வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் தரும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. சுக்கிரனுக்கு இந்த வீடு உச்சம்

நடிப்பு துறையில் வெற்றி பெறலாம். குழந்தை பாக்கியம் கி்டைக்கும். தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் நன்றாக இருக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு பதினோராவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். சுக்கிரனுக்கு இந்த வீடு சமம்

குழந்தைகள் இருக்கும். நண்பர்களின் உதவி இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி செய்வார்கள். தொழிலில் நல்ல வருமானம் கி்டைக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மிதுனத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் ஆட்சி வீடு

புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகளால் அவமானம் ஏற்படும். அதிக செலவு ஏற்பட்டு மனக்கவலையை ஏற்படுத்தும். மருத்துவசெலவு வைக்கும்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: