Followers

Tuesday, January 29, 2013

மிதுனம் : ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே !

பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்தவருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் மிதுனராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

மிதுனராசிக்கு ஐந்தாவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் வீட்டில் சனி அமர்கிறார்.சனிக்கு இந்த வீடு உச்ச வீடு. உச்ச வீடு என்பதால் விட்டுவிடுவாரா என்ன அவர் தான் அனைத்து பேரையும் ஒரு வழி செய்கிறார் அல்லவா அதனால் இப்படி சொன்னேன்.

யாரைக் கெடுத்து இருப்பார்?

மிதுனத்திற்க்கு எட்டாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டிற்க்கு சனிபகவான் அதிபதியாகிறார். ஒன்பதாவது வீடு என்பது தந்தை மற்றும் முன்னோர்களை காட்டும் இடம் அதுபோல் நமது குருவையும் காட்டும் இடம் இவர்களுக்கு தீங்கு இழைத்திருக்கலாம்.

எட்டாவது இடம் மரணத்தை காட்டு்ம் இடம் ஏதாவது பிணத்திற்க்கு கூட தீங்கு நடத்திருப்பார் எப்படி பிணத்திற்க்கு தீங்கு செய்யமுடியும். யாராவது ஒருவர் இறந்திருப்பார் அவரை புதைப்பதற்க்கு கூட இடம் இருந்திருக்காது இவரிடம் வந்து கேட்டுருப்பார்கள் இவர் இடம் கொடுக்க முடியாது என்பார். 

அதே நேரத்தில் இவரின் நிலத்தின் வழியாக பிணத்தை எடுத்துச்செல்ல கூடாது என்று சொல்லிருப்பார் அதன் மூலமாகவும் இந்த தோஷம் வந்திருக்கும். யாரையாவது மாந்தீரிகம் வழியாக கொன்று இருக்கலாம் அதனால் கூட இந்த தோஷம் வரும்.


எப்படி கெடுத்து இருப்பார்?

துலாம் ராசி நண்பர்களுக்காக உயிரைகூட விடும் ராசி என்று சொல்லலாம். துலாத்தில் சனி இருப்பது அதனை தான் காட்டும்.இவர் நண்பருக்காக சேர்ந்து இவர் கொலை கூட செய்வார். இவரின் நண்பருக்காக இவர் செயலில் இறங்கிகூட மாட்டிருப்பார்.

என்ன பரிகாரம்?

வழக்கம்போல் சம்பந்தப்பட்ட நபருக்கு உதவி செய்வதன் வழியாக உங்களின் உங்களின் கர்மாவை குறைத்துக்கொள்ளலாம். நண்பருக்காக இறங்குவதை இந்த ஜென்மத்தில் தவிர்க்கவும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: