Followers

Tuesday, January 1, 2013

பூர்வ புண்ணியம் 6


வணக்கம் நண்பர்களே! 
                      பூர்வ புண்ணியத்தைப்பற்றி பார்த்து வந்தோம் அதனைப்பற்றி சோதிடத்துடன் பார்க்கலாம் என்று சொல்லிருந்தேன். அதனைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பூர்வபுண்ணியம் என்று சொன்னவுடன் நாம் ஐந்தாம் வீட்டை தான் பார்ப்போம் இந்த ஐந்தாம் வீடு எதற்கெல்லாம் காரகதுவம் வகிக்கிறது என்பதை பார்த்துவிடலாம். நீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என்று தெரியவரும். அந்த ஜென்மத்தில் நல்லவராக இருந்தீர்களா அல்லது தீயவராக இருந்தீர்களா என்று தெரியவரும். இந்த ஒன்றை வைத்து தான் உங்களின் இப்பிறவியில் என்ன கிடைக்கும் என்பது தெரியவரும்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா அல்லது இல்லையா என்று காட்டும் இடமும் இந்த வீடு தான். காதல் வசப்படுவதற்க்கு காட்டும் இடமும் ஐந்தாம் வீடு தான், அறிவாற்றலுக்குறிய பாவமுமாகும். கற்பனைத்திறன் புதிய கண்டுபிடிப்பு விளையாட்டில் ஆர்வம் சூதாட்டத்தில் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் பாவமும் இது தான்.

ஐந்தாம் வீட்டில் என்ன கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வத்தை சொல்லும் பாவமும் இது தான்.

நீங்கள் சோதிட பார்க்கும் போது முதலில் ஐந்தாம் வீட்டை ஒரு நோட்டம் விடுங்கள் அதில் கிரகங்கள் இருக்கின்றனவா என்று பாருங்கள் அதில் கெடுதல் கிரகங்கள் இருந்தால் உடனே நீங்கள் அந்த ஆளிடம் உஷாராக இருக்கவேண்டும். இது வில்லங்க பார்ட்டி என்று நீங்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

சோதனை 1

உங்களுக்கு அருகில் இருக்கும் நபர்கள் அல்லது நண்பர்களின் ஜாதகத்தை வாங்குங்கள். ஐந்தாம் வீட்டில் தீய கிரகங்கள் இருக்கும் நபர்களை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். அந்த நபர்களிடம் நீங்கள் ஏதாவது ஆன்மீக விசயத்தைப்பற்றி தவறாக சொல்லுங்கள் உடனே அவர்கள் நீங்கள் சொல்லுவது தவறு அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் இப்படிபட்டவர்கள் ஒரு டஜன் ஆன்மீகவாதிகளை கையில் வைத்திருப்பார்கள் அவர்களை வைத்துக்கொண்டு ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே காலத்தை ஓட்டுவது இவர்களின் வேலையாக இருக்கும். அட அந்த ஆன்மீகவாதியிடம் ஏதாவது கற்றக்கொண்டார்களா என்றால் அவர்களிடமும் ஒன்றும் கற்றுக்கொண்டு இருக்கமாட்டார்கள். அவர்களிடமும் போய் ஏதாவது தர்க்கம் செய்வது தான் வேலையாக இருக்கும். ஏன் என்றால் பூர்வபுண்ணியம் கெட்டால் அவர்களின் செயல் இப்படி தான் இருக்கும். அவர்களால் ஒரு போதும் ஆன்மீகத்தை உணரமுடியாது.

சோதனை 2

நீங்கள் இவர்களை வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று சொல்லுங்கள். உடனே சொல்லுவார்கள் ஏன் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் அங்கு யார் இருக்கிறார்கள்  அந்த தெய்வத்தைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்பார்கள் கேட்டுவிட்டு நான் வரவில்லை நீ சென்று வா என்று சொல்லிவிட்டு நீங்கள் செல்லும் கோவிலுக்கு நல்ல நாளாக பார்த்து இவர்கள் தனியாக சென்று வருவார்கள். உங்களோடு சென்றால் இவர்களுக்கு அந்த தெய்வபக்தியாவது சிறிது கிடைத்திருக்கும். இவர்கள் தனியாக சென்று ஒன்றுமே அவர்களால் உணரமுடியாது.

உலகில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் சித்தர்கள் அவர்களைப்பற்றிய செய்திகளை ஒரு டேட்டாபேஷ்யை போல் உருவாக்கி வைத்திருப்பார்கள். இவர்களை ஆன்மீகத்திற்க்கு நீங்கள் இழுத்துபாருங்கள் கடைசியில் அசிங்கப்படுவது நீங்களாகதான் இருக்கும்.

நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சில பேர் கோவிலை பார்த்தால் சாமி ஆடுவார்கள். அதனைப்பற்றி பயந்து ஆ உ என்று கற்றுவார்கள் இது எல்லாம் ஐந்தாம் வீடு செய்யும் வில்லங்கம். ஒரு சிலர் சாமி ஆடுவது நல்ல முறையில் ஆடி குறி எல்லாம் சொல்லுவார்கள். இதில் முக்கால்வாசி பேர் ஏமாற்றுவார்கள்.

இன்றைக்கு இருக்கும் முக்கால்வாசி ஆன்மீகவாதிகள் பூர்வபுண்ணியம் கெட்டவர்கள் ஏன் இவ்வாறு அதில் ஈடுபடுகிறார்கள் என்றால் எந்த விசயத்தில் ஜாதகம் கெடுகிறதோ அந்த விசயத்தில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்திவிடும் கிரகநிலைகள். இதனை நீங்கள் சுயசோதனை செய்யும் போது நான் சொல்லுவது உண்மை என்று உங்களுக்கு புரியவரும்.

ஒரு மனிதனுக்கு கடைசி ஆறுதல் கடவுளிடம் சரணாகதி அடைவது தான் அந்த கடைசி ஆறுதலே இவர்களுக்கு பிரச்சினை என்னும் போது எப்படி இதனை சரிசெய்வது இப்படி பல விசயங்களை பூர்வபுண்ணியாதிபதி மறைத்து வைத்ததால் அதனை வெளியில் சொல்லக்கூடாது அவர்கள் இடிந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று நினைத்து ஐந்தாவது வீட்டைப்பற்றி அதிகம் யாரும் எழுதுவதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

Unknown said...

ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் என்ன பூர்வபுண்ய பலன் என்று கூறுங்கள் ராஜேஷ் ....நன்றி....:)

KJ said...

Sir, for virichiga lagna, sevvai in fifth house. What would be the effect. Guru parvai to fifth house will rectify all the problems ?(in both rasi and amsam)

jamuna said...

sir you give lots of useful and interesting information here. please give more information about poorva punniyam and marupiravi . how to find out the rebirth in particular jathagam

jamuna said...

sir i really apreciate you explain these type of topics... i like to know about marupiravi in jathagam